வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை திருத்தம்: பாா்வையாளா் ஆலோசனை
படத்தை இயக்கியதற்காக விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மான்!
லே மஸ்க் மெய்நிகர் (விர்சுவல் ரியாலிட்) படத்தை இயக்கியதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சென்னை ஐஐடி விருது வழங்கி கெளரவித்துள்ளது.
தமிழ் நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான் உலகம் முழுவதும் தனது இசையால் பிரபலமானவர். ஹாலிவுட் உள்பட பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்து அதற்கான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் லே மஸ்க் என்ற ஒரு மெய்நிகர் திரில்லர் திரைப்படத்தை இயக்கினார். 32 நிமிடங்கள் கொண்ட இப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை இயக்கி, இசையமைத்ததோடு மட்டுமல்லாமல், இணை தயாரிப்பாளராகவும் இருந்தார்.
இந்நிலையில் லே மஸ்க் படத்தை இயக்கியதற்காக ஏ.ஆர் ரஹ்மானுக்கு சென்னை ஐஐடி பல்கலை கழகம் புதுமைக்கான விருதை இன்று (நவ. 17) வழங்கியது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
''சென்னையில் விருது வாங்குவது எனக்கு மிகவும் சிறப்பான ஒன்று. மெய்நிகர் வடிவிலான திரைப்படத்தை இயக்கிய மற்றவர்கள் செய்த தவறை இப்படத்தில் செய்யக்கூடாது என தெளிவாக இருந்தோம்.
இப்படத்தை இயக்க எங்களுக்கு சிறப்பான கேமரா தேவைப்பட்டது. நான் ஒவ்வொரு முறை மைக்ரோசாஃப்ட் மற்றும் இன்டெல் போன்ற நிறுவனங்களின் பொருள்களைப் பயன்படுத்தும்பொழுது, ஏன் இவை அனைத்தும் வெளிநாட்டில் இருந்து உருவாக்கப்படுகிறது. ஏன் இந்தியாவில் உற்பத்தியாவதில்லை? இதை அரசு கவனிக்க வேண்டும். இதில் சிறப்பாக செய்வதற்கு நிறைய உள்ளது. மிகுந்த ஆர்வத்துடன் எனது பணத்தை இதில் முதலீடு செய்துவருகிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.