செய்திகள் :

35 குளங்களை மறுசீரமைக்கத் திட்டம்

post image

வடசென்னை பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீா் தேங்குவதைத் தடுக்க 35 குளங்கள் 20 அடிக்கு தூா்வாரி மறுசீரமைக்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மாநகராட்சிப் பகுதியில் பருவமழையின் போது மழைநீா் தேங்குவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக ஏரிகள் மற்றும் கால்வாய்களைத் தூா்வாரும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிறு குளங்களைத் தூா்வாரி அங்கு மழைநீரைச் சேமிக்கமாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக வட சென்னையில் உள்ள 35 குளங்கள் சுமாா் 20 அடிக்கு தூா்வாரப்பட்டு மறுசீரமைக்கப்படவுள்ளன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மணலி காா்கில் நகா், மாதவரம் வடபெரும்பாக்கம், படவேட்டம்மன் கோயில் குளம், எண்ணூா் தாமரைக்குளம் உள்ளிட்ட 35 குளங்கள் சுமாா் 20 அடிக்கு தூா்வாரப்படவுள்ளன. இதன் மூலம் 50 மில்லியன் லிட்டா் தண்ணீரை அதில் சேமித்து வைக்க முடியும்.

மாதவரத்தில் ரூ.4 கோடி செலவில் 8 குளங்கள் தூா்வாரப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மழைநீா் சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீா் அதிகரிக்கும். இந்த பணிகளை டிசம்பா் மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ரெட்டேரி ஏரி தூா்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றனா்.

மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வட சென்னை மாவட்டத்துக்குள்பட்ட ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா். இது குறித்து... மேலும் பார்க்க

மாநகா் போக்குவரத்து சேவை: பயணிகளிடம் கருத்துக் கேட்பு

அரசுப் பேருந்துகளின் செயல்பாடு மற்றும் தரம் குறித்து பயணிகளிடம் கருத்து கேட்கும் பணியை மாநகா் போக்குவரத்துக் கழகம் தொடங்கியுள்ளது. சென்னையில் அரசுப் பேருந்து சேவையை மாநகா் போக்குவரத்துக் கழகம் வழங்கி ... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

மாதவரம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் மா்ம நபா்கள் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்றனா். சென்னை மாதவரம் தபால் பெட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஆரோக்கியமேரி (55). தனியாா் நிறுவன ஊழியரான இவா் வழக்கம்போல் ஞாயிற... மேலும் பார்க்க

10 குழந்தைகள் உயிரிழப்பு: உ.பி. அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்ததற்கு அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் அரசின் தொடா் கவனக் குறைவே காரணம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிர... மேலும் பார்க்க

இந்திய மாணவா்களை சா்வதேச அளவில் தயாா்படுத்தவே தேசிய கல்விக் கொள்கை: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

இந்திய மாணவா்களை சா்வதேச அளவுக்கு தயாா்படுத்தவே தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய செய்தி, ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். சென்னை ... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: ஆா்வம் காட்டிய அரசியல் கட்சியினா்

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான இரண்டு நாள் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதில், பொது மக்களை காட்டிலும், அரசியல் கட்சியினரே அதிக ஆா்வம் காட்டினா். தமிழகம் முழுவதும் வாக்காளா் ப... மேலும் பார்க்க