செய்திகள் :

படையெடுத்த இளைஞர்கள்; ஸ்தம்பித்த போக்குவரத்து - முதல் நாள் இரவே மூடப்பட்ட அவிநாசி சாலை மேம்பாலம்

post image

கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடங்கியது. பணிகள் முடிந்த நிலையில் அந்த பாலத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொது மக்களின் பயன்பாட்டுக்காக நேற்று திறந்து வைத்தார்.

கோவை அவிநாசி சாலை மேம்பாலம்

மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. பாலம் திறக்கப்பட்டிருப்பதால் அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் நாள் இரவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பாலத்தை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மிக நீளமான பாலம் என்பதால், அதில் பயணித்து போட்டோ எடுப்பதற்காக நேற்று மாலையில் தொடங்கி இரவு வரை ஏராளமான இளைஞர்கள் மேம்பாலத்திற்கு படையெடுத்தனர். அதில் பலரும் கட்டுப்பாடின்றி வேகமாக வாகனங்களை இயக்கினார்கள். மேம்பாலத்தின் ஏறு, இறங்கு தளங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்ஃபி எடுக்க தொடங்கினார்கள்.

கோவை அவிநாசி சாலை மேம்பாலம்

ஏறு, இறங்கு தளங்கள் குறித்த அறிவிப்புப் பலகை வைக்கவில்லை. இதனால எந்தப் பக்கம் ஏற வேண்டும், எந்தப் பக்கம் இறங்க வேண்டும் என்று தெரியாமல் மக்கள் குழம்பினார்கள். இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உப்பிலிபாளையம் பகுதியில் பெரிய ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. அது பழைய மேம்பாலம், புதிய மேம்பாலம் ஆகியவ்ற்றை இணைக்கும் பகுதியாக உள்ளது. ரவுண்டானா மிகவும் பெரிதாக இருப்பதால் அங்கிருந்தே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை மேம்பாலம் மூடப்பட்டு போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை அவிநாசி சாலை மேம்பாலம்

இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர், “மக்கள் பாலத்தை பார்வையிட அதிகளவு வந்த காரணத்தால் தான் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  அதில் பெரும்பாலான வாகனங்களில் ஆங்காங்கே யூடர்ன் எடுத்ததும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம். ஒருவாரம் ஆய்வு செய்துவிட்டு தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.” என்றார்.

"16-ம் நாள் காரியம் முடிந்ததும் உண்மைகளைச் சொல்வோம்"- டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய ஆதவ் அர்ஜுனா

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது அரசியல் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது, 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தே... மேலும் பார்க்க

"போரை நிறுத்தும் பணியை ட்ரம்ப் தொடர்வார்" - நோபல் குழுவை விமர்சித்த வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு, தான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவன், தனக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று கடந்த ஏழெட்டு மாதங்களாகக் கூறி வந்தார் டொனால்ட் ட்ரம்ப்.அமெரிக்காவின் உதவியுடன் கா... மேலும் பார்க்க

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 'மரியா கொரினா மச்சாடோ' - தலைமறைவாக இருப்பது ஏன்?

2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோ. மக்களாட்சிப் போராளியான இவர், பல ஆண்டுகளாக வெனிசுலாவின் சர்வாதிகார ஆட்சியாளர் நிக்கோலஸ் மதுரோவின் அ... மேலும் பார்க்க

புதுச்சேரி: `மாணவர்கள் மீதான வழக்கை உடனே திரும்பப் பெற வேண்டும் என எச்சரிக்கிறோம்!’ -தகிக்கும் திமுக

`புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பாலியல் புகாருக்குள்ளான பேராசிரியர்களை கைது செய்ய வேண்டும்’ என்று போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அவர்களை போலீஸார் கைது செய்தனர். புதுச்சேரியில் ... மேலும் பார்க்க

புதுச்சேரி: பல்கலைக்கழக மாணவர்களை `ஷு’ காலால் தாக்கிய போலீஸார் - `லெஃப்ட் ரைட்’ வாங்கிய எம்.எல்.ஏ

மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் மாதைய்யா, தன்னை தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் தொல்லை செய்வதாக மாணவி ஒருவர் கதறும் ஆடியோ பு... மேலும் பார்க்க

"நாடகமாடுறீங்களா, அவருக்கு ஏதாச்சும் ஆச்சுனா தொலைச்சிடுவேன்" - ராமதாஸ் குறித்து அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே கட்சி நிர்வாக அதிகாரம் தொடர்பாக பல மாதங்களாக உட்கட்சி மோதல் நடந்து கொண்டிருக்கிறது.இத்தகைய சூழலில், கடந்த வாரம் (அக்டோபர் ... மேலும் பார்க்க