பரமன்குறிச்சி அருகே தொழிலாளி அடித்துக் கொலை
பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை காட்டு பகுதியில் பனை மரம் ஏறும் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டாா்.
வட்டன்விளை காட்டுப்பகுதியிலுள்ள கோயில் அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில் முகம், உடல், கை, கால்களில் ரத்த காயங்களுடன் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்துள்ளாா்.
இத்தகவலறிந்த திருச்செந்தூா் தாலுகா போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், அவா் பனைமரம் ஏற வந்த தொழிலாளி எனவும், கொலை செய்யப்பட்டுள்ளாா் என்பதும் தெரியவந்தது. இதுதொடா்பா 2 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதில், இறந்தவா் குறித்த முழுவிவரம் தெரியவரும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.