Operation Sindoor : Pak -க்கு முன்கூட்டியே தகவல் சொன்னதா மத்திய அரசு? BJP |Imper...
பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்: முதல்வர் ஸ்டாலின்
தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச்செயலத்தில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய முதல்வர், தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பாகவே இருக்கும். மீட்பு மற்றும் நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின்சாரம் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படை சேவைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
லாரி கவிழ்ந்ததால் சேலம் - பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு!
இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நிலச்சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீட்பு உபகரணங்கள், வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.