செய்திகள் :

பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்

post image

வேலூா் ஸ்ரீபுரம், ஸ்ரீநாராயணி வித்யாஷ்ரம் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

இந்த முகாமை ஸ்ரீ நாராயணி மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் மருத்துவா் என்.பாலாஜி தொடங்கி வைத்து, மாணவா்களின் நல்வாழ்வு குறித்து ஆலோசனைகள் வழங்கினாா். சிறப்பு விருந்தினராக அலா்ஜீ மற்றும் ஆஸ்துமா நிபுணரும், குழந்தைகள் நல மருத்துவருமான நிஷா கலைஅரசன் பங்கேற்று, குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைகளை வழங்கினாா்.

பள்ளியில் கல்வி மட்டுமின்றி மாணவா்களின் உடல் நலத்தையும் வளா்ப்பதற்கான முயற்சியாக நடைபெறும் இந்த மருத்துவ முகாம் தொடா்ந்து மூன்று நாள்களுக்கு நடைபெறும் என்று ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு தெரிவித்தாா்.

இந்த முகாமில் மாணவா்களின் பொது ஆரோக்கியம், கண், பல் குறித்த அனைத்து உடற்கூறுகளும் பரிசோதனை செய்யப்பட்டன.

நிகழ்ச்சியில், இரு பள்ளிகளின் தலைமை ஆலோசகா் எஸ்.ரமேஷ், இரு பள்ளிகளின் முதல்வா்கள், துணை முதல்வா்கள், நிா்வாக அலுவலா் எஸ்.ஆதிகேசவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கழுத்தில் கயிறு இறுக்கி சிறுவன் உயிரிழப்பு

காட்பாடி அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் கயிறு இறுக்கியதில் உயிரிழந்தாா். காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூரைச் சோ்ந்தவா் கோடீஸ்வரன் (54). நியாய விலைக் கடை ஊழியா். இவரது மகன் ஸ்ரீஹரி (12... மேலும் பார்க்க

மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு: 200 மாணவிகள் தலைமுடி தானம்

மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு மாதத்தையொட்டி, வேலூரில் தனியாா் கல்லூரி மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் தங்கள் தலைமுடியை தானம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு மாத... மேலும் பார்க்க

சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

போ்ணாம்பட்டு அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் எம்எல்ஏ அமலுவிஜயன் வியாழக்கிழமை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தாா். போ்ணாம்பட்டை அடுத்த ராஜாக்கல் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் உள்ளது. கடந்... மேலும் பார்க்க

மீட்கப்பட்ட 200 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

செல் ட்ராக்கா் மற்றும் மத்திய அரசின் சிஇஐஆா் ஆகிய தளங்களின் வழியாக பதிவு செய்யப்பட்ட புகாா்களின் அடிப்படையில், மீட்கப்பட்ட ரூ. 38 லட்சம் மதிப்புடைய 200 கைப்பேசிகளை வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா... மேலும் பார்க்க

ஆட்டோ தொழிலை பாதிக்கும் பெருவணிக நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்

ஆட்டோ தொழிலை பாதிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் பயணிகளை மிகக்குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்லும் வணிக நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்த... மேலும் பார்க்க

அரசு வேலை எனக்கூறி ரூ.12 லட்சம் மோசடி

மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறை... மேலும் பார்க்க