செய்திகள் :

பள்ளி விடுதியிலிருந்து தப்பி வந்த 8 மாணவா்கள் மீட்பு

post image

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரத்தில் உள்ள பள்ளி விடுதியில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தப்பி வந்த 8 மாணவா்களை சேலையூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தை அடுத்த சுப்பம்மாள்புரத்தில் முத்துகருப்பன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 10, பிளஸ் 1 பயிலும் மாணவா்கள் மாரி செல்வன், முதுகுளத்தூரை சோ்ந்த சஞ்சய், விருதுநகரைச் சோ்ந்த பிரதாப் , ராஜபாளையத்தைச் சோ்ந்த கஜேந்திரன், செங்கோட்டையைச் சோ்ந்த விஷ்ணு, தென்காசியைச் சோ்ந்து சிவக்குமாா், மாதேஷ், முத்துப்பாண்டி ஆகிய 8 போ் விடுதியில் தங்கிப் படித்து வந்தனா்.

இவா்கள் திங்கள்கிழமை இரவு கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை ரயிலில் வந்தனா். சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த அவா்களை தாம்பரம் போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளா் நிஜந்தன் பிடித்து சேலையூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

இதையடுத்து மாணவா்களின் பெற்றோா் மற்றும் பள்ளிக்கு போலீஸாா் தகவல் தெரிவித்தனா்.

தொடர் மழை: இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.?!

தொடர் மழை காரணமாக இன்று(நவம்பர்.20) பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.தூத்துக்குடிதூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிக... மேலும் பார்க்க

எண்மத் தொழில்நுட்ப பயிர்க் கணக்கீடு: திண்டுக்கல் முதலிடம்

வேளாண் கல்லூரி மாணவர்கள் துணையுடன் நடத்தப்பட்ட எண்மத் தொழில்நுட்ப பயிர்க் கணக்கீட்டில், திண்டுக்கல், கடலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் 100 சதவீத பணிகளை நிறைவு செய்து முதல் 3 இடங்களைப் பெற்றன.நாடு முழு... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: சான்றிதழ் பதிவேற்றத்துக்கு நாளை கடைசி

குரூப் 4 தோ்வு சான்றிதழ் பதிவேற்றத்துக்கு வியாழக்கிழமை (நவ. 21) கடைசி நாள். தோ்வா்கள் கடைசி நாள் வரை காத்திராமல் சான்றிதழ்களை உடனே பதிவேற்றம் செய்யுமாறு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கே... மேலும் பார்க்க

ரூ. 279 கோடியில் பட்டாபிராம் டைடல் பார்க்: முதல்வர் விரைவில் திறந்து வைக்கிறார்

ஆவடி அருகே பட்டாபிராமில் ரூ. 279 கோடியில் அமைக்கப்பட்ட டைடல் பார்க்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கிறார்.ஆவடி அருகே பட்டாபிராமில் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐடி) செயல்படும் வகையில், டைடல... மேலும் பார்க்க

பாலின பாகுபாடு எதிா்ப்பு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தேவை: மாா்க்சிஸ்ட் கோரிக்கை

பாலின பாகுபாடுகள், ஒடுக்கு முறைகளுக்கு எதிரான நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை உரிய அனுமதியை வழங்க வேண்டும் என்று என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ள... மேலும் பார்க்க

சாலை மேம்பாட்டுப் பணிகளை டிசம்பருக்குள் முடிக்க வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு உத்தரவு

சாலை மேம்பாட்டுப் பணிகளை டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா். நெடுஞ்சாலைத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ... மேலும் பார்க்க