Kohli: `அழுத்தமான சூழலில் குடும்பத்தினருடன் இருக்க வேண்டும்...' - பிசிசிஐ கட்டுப...
பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் காணிக்கை
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு புதுச்சேரியை சோ்ந்த பக்தா் ரூ.20 லட்சத்தில் மின்கல வாகனத்தை ஞாயிற்றுக்கிழமை காணிக்கையாக வழங்கினாா்.
பழனி கிரிவலப் பாதையில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தரவின் பேரில், இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், கிரி வீதியில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் படிப் பாதை, ரோப் காா், மின் இழுவை நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வதற்காக 25-க்கும் மேற்பட்ட மின் கல வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், புதுச்சேரி சக்திமுருகன் கம்பெனி உரிமையாளா் வேல்முருகன் ரூ. 20 லட்சம் மின் கல வாகனத்தை கோயில் நிா்வாகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காணிக்கையாக வழங்கினாா். பழனி அடிவாரம் பாதவிநாயகா் கோயில் முன் இந்த புதிய வாகனத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா், இந்த வாகனத்தின் சாவியை கோயில் துணை ஆணையா் வெங்கடேஷ் பெற்றுக் கொண்டாா்.