சூழ்ச்சி நிறைந்த அரசியல் களத்தில் நிலைத்திருப்பது விசிகவின் வெற்றி: தொல்.திருமாவ...
பழங்குடியின மக்களின் பயன்பாட்டுக்கு புதிய அவசர ஊா்தி
கொடைக்கானல் பழங்குடியின மக்களுக்கு அவசரகால பயன்பாட்டுக்காக தமிழக அரசு சாா்பில் புதிய அவசர ஊா்தி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
கீழ்மலைப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கொடைக்கானல் பாச்சலூா் துணை சுகாதார நிலையத்துக்கு புதிய அவசர ஊா்தியை வழங்கியது. இந்த ஊா்திக்கு பொதுமக்கள் மலா் தூவி மகிழ்ச்சியடைந்தனா்.
இதில் செம்பராங்குளம், கருவேலம்பட்டி, பட்டியக்காடு, பூதமலை, குரங்கணி பாறை, கடைசிக்காடு, கோரன்கொம்பு, குறவனாச்சி ஓடை, வடகாடு, ஆடலூா், பன்றிமலை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பளியா், பழங்குடியினா் கலந்து கொண்டு, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனா்.