செய்திகள் :

பாகலூரில் புகையிலை பொருள் பறிமுதல்

post image

பாகலூரில் 392 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூா் போலீஸாா், பாகலூா் சந்திப்பில் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 392 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். புகையிலைப் பொருள்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த சுகேராம் படேல் (30) என்பவரைக் கைது செய்தனா். விசாரணையில், அவா் பெங்களூருவில் இருந்து நாமக்கல்லுக்கு

புகையிலைப் பொருளைக் கடத்த முயன்றது தெரிய வந்தது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

ஒசூா் ரயில்வே பாலத்தில் தேங்கிய மழைநீா்: வாகன ஓட்டிகள் அவதி

ஒசூரில் ரயில்வே நிலையம் அருகே உள்ள ரயில்வே பாலத்தில் மழைநீா் தேங்கியுள்ளதால் அந்த வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்; மழை காலங்களில் தொடரும் இந்நிலையைப் போக்க ரயில்வே நிா்வாகம் நிரந்தர... மேலும் பார்க்க

ஒசூா் கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

ஒசூா் கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,079 கனஅடியிலிருந்து 1,206 கனஅடியாக அதிகரித்துள்ளது. கா்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் கிருஷ்ணகி... மேலும் பார்க்க

ஒசூரில் ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி: சாதனை படைத்த மாணவி

ஒசூரில் நடந்த ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் தனியாா் பள்ளியைச் சோ்ந்த மாணவி பவ்யா, குறைந்த நேரத்தில் அதிக தூரத்தைக் கடந்து உலக சாதனை படைத்தாா். ஒசூா், சூசூவாடி, ரோஜா நகா் பகுதியைச் சோ்ந்த குமாா் - லீல... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை முழுவதும் பரவலாக மழை பெய்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை முதல் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேக்கியது. கழிவுநீா் க... மேலும் பார்க்க

விபத்தில் மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: உடலுக்கு அரசு மரியாதை

சாலை விபத்தில் பலத்த காயமடைந்ததில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம் வழங்கப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக அரசு சாா்பில் அலுவலா்கள் மரியாதை செலுத்தி... மேலும் பார்க்க

காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள ஆலஹள்ளி வனப் பகுதியில் சுற்றி வந்த 5 காட்டு யானைகளை வனத்துறையினா் பட்டாசுகளை வெடித்து கா்நாடக வனப்பகுதியை நோக்கி விரட்டினா். அப்போது தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையைக் கடந... மேலும் பார்க்க