பாகிஸ்தானில் நிலநடுக்கம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது குறித்து அந்த நாட்டு நிலநடுக்கவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தஜிகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான எல்லையையொட்டி வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. 212 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 5.2 அலகுகளாகப் பதிவானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலடுக்கத்தின் அதிா்வுகள் நாட்டின் வடமேற்குப் பகுதியில் உணரப்பட்டன. பெஷாவா் நகரிலும், கைபா் பக்துன்கவா மாகாணத்தின் பிற பகுதிகளிலும் இந்த நிலடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.