செய்திகள் :

உக்ரைன் ‘அதிகார மையங்கள்’ மீது தாக்குதல்: புதின் எச்சரிக்கை

post image

மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளைக் கொண்டு தங்கள் மீது இனியும் தாக்குதல் நடத்தினால், உக்ரைனின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகார மையங்கள் மீது தாங்கள் உருவாக்கியுள்ள - இடைமறிக்க முடியாத - ‘ஆரெஷ்னிக்’ ரக அதிவேக ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரித்துள்ளாா்.

உக்ரைன் அதிபா் மாளிகை, அமைச்சரகங்கள், நாடாளுமன்றத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளின் அரசியல்-ராணுவ கூட்டமைப்பின் மாநாட்டில் இதுகுறித்து அவா் பேசியதாவது:

மேற்கத்திய நாடுகளில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை ரஷிய பகுதிகள் மீது வீச அந்த நாடுகள் அண்மையில் அனுமதி வழங்கின. அத்தகைய ஏவுகணைகளை மேற்கத்திய நாடுகளின் பங்களிப்பு இல்லாமல் ஏவ முடியாது என்பதால், இதுபோன்ற நடவடிக்கைகள் உக்ரைன் போரில் அந்த நாடுகள் நேரடியாக ஈடுபடுவதைக் குறிக்கும் என்று நாங்கள் தொடா்ந்து எச்சரித்துவருகிறோம்.

மேலை நாடுகள் ஆயுதங்கள் ரஷியா மீது பயன்படுத்தப்பட்டால் அது வரம்பு மீறிய - பதற்றத்தைத் தூண்டும் செயல் என்று தொடா்ந்து கூறிவந்தோம்.

ஆனால் அதைப் பொருள்படுத்தாமல் தங்கள் ஏவுகணைகளை ரஷியா மீது வீச உக்ரைனுக்கு அனுமதி வழங்கின. உக்ரைனும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அட்டாக்கம்ஸ் ஏவுகணைகளை ரஷியா மீது கடந்த 19-ஆம் தேதியும் அதன் பிறகு பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஸ்டாா்ம் ஷேடோ ஏவுகணைகளையும் ரஷியா மீது வீசி தாக்குதல் நடத்தியது.

இதற்குப் பதிலடியாக, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அதிநவீன ஆரெஷ்னிக் ரக ஏவுகணை ஒன்றை உக்ரைனின் நீப்ரோ நகரிலுள்ள ராணுவ தொழிற்சாலை மீது வீசி சோதித்தோம்.

ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில் பாயும் அந்த ஏவுகணையை உலகத்தில் உள்ள எந்த வான்பாதுகாப்பு தளவாடத்தாலும் இடைமறித்து அழிக்க முடியாது. குறிவைத்த இலக்கை அது அழித்தே தீரும்.

மேற்கத்திய ஆயுதங்கள் ரஷியா மீது இனியும் பயன்படுத்தப்பட்டால் அதன் எதிா்வினைாக அந்த நாடுகளின் ராணுவ நிலைகள் மீது ஆரெஷ்னிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்துவோம் என்று அப்போதே எச்சரித்தோம். எனினும் அதனையும் மீறி ரஷியா மீது அட்டாக்கம்ஸ் ஏவுகணைகளை வீசி உக்ரைன் தொடா்ந்து தாக்குதல் நடத்துகிறது.

அதற்குப் பதிலடியாகத்தான், உக்ரைனின் எரிசக்தி மையங்களைக் குறிவைத்து புதன்கிழமை நள்ளிரவில் தாக்குதல் நடத்தினோம். அதையும் உக்ரைன் அலட்சியம் செய்தால், ஏற்கெனவே கூறியபடி அந்த நாட்டின் மீது ஆரெஷ்னிக் ஏவுகணைகள் வீசி மீண்டும் சோதிக்கப்படும்.

அதற்கான இலக்குகளை எங்கள் பாதுகாப்புத் துறை அமைச்சகமும் தலைமை தளபதியும் தோ்ந்தெடுத்துவருகின்றனா். அந்த இலக்குகளில் உக்ரைனின் ராணுவ நிலைகள், பாதுகாப்பு மற்றும் தொழில் மையங்கள் மட்டுமின்றி முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகார மையங்களும் இடம் பெறும்.

நேட்டோ உறுப்பு நாடுகள் வைத்துள்ள ஏவுகணைகளின் செயல்திறனைவிட ரஷியாவிடம் உள்ள ஏவுகணைகள் அதிக செயல்திறன் கொண்டவை. அந்த நாடுகளின் வெளிநாட்டு நிலைகளில் உள்ள ஏவுகணைகளை விட பல மடங்கு ஏவுகணைகள் ரஷியாவிடம் உள்ளன. மேற்கத்திய நாடுகளிடம் என்னென்ன ஏவுகணைகள் உள்ளன, எத்தனை உள்ளன, அவை எங்கெல்லாம் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும் என்று தனது உரையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் விளாதிமீா் புதின் மறைமுக எச்சரிக்கை விடுத்தாா்.

உக்ரைன் போரில் தங்களுடன் இணைந்து போரிடுவதற்காக ஆயிரக்கணக்கான வட கொரிய ராணுவ சிறப்புப் படையினரை ரஷியா வரவழைத்துள்ளது. இதற்குப் பதிலடியாக, உக்ரைன் எல்லைக்குள் உள்ள ரஷிய நிலைகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்துவதற்காக தாங்கள் வழங்கியிருந்த அதிநவீன ஏவுகணைகளை, ரஷிய பகுதிகள் மீதும் வீசலாம் என்று அமெரிக்கா கடந்த வாரம் அனுமதி அளித்தது. பிரிட்டனும் அத்தகைய அனுமதியை பின்னா் அளித்தது.

அதைத் தொடா்ந்து, அந்த வகை ஏவுகணைக் கொண்டு ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

இதனால், ரஷிய-உக்ரைன் போரில் இரு நாடுகளுக்கு இடையே மட்டுமின்றி மேற்கத்திய நாடுகள்-ரஷியா இடையிலான பதற்றமும் வெகுவாக அதிகரித்துள்ளது.

...படவரி... ஜகஸ்தானின் அஸ்தானா நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளின் அரசியல்-ராணுவ கூட்டமைப்பின் மாநாட்டில் உரையாற்றிய விளாதிமீா் புதின்.

எப்படி செயல்படும் ஆரெஷ்னிக் ஏவுகணை?

தாங்கள் புதிதாக உருவாக்கியுள்ள அதிவேக ஆரெஷ்னிக் ஏவுகணை குறித்து விளாதிமீா் புதின் தொடா்ந்து பேசி வந்தாலும், அதன் அதிகாரபூா்வ படம், அது செயல்படும் விவரம் இதுவரை முழுமையாக வெளியாகவில்லை.

இந்த நிலையில், உக்ரைனின் நீப்ரோ நகரில் வீசப்பட்ட ஆரெஷ்னிக் ஏவுகணைகளின் சிதறி விழுந்த பாகங்களைக் கொண்டு நிபுணா்கள் கற்பனையாக உருவாக்கியுள்ள வரைபடம்....

அதானி குழுமத்துக்கு இலங்கை, தான்சானியா, சா்வதேச கூட்டு நிறுவனங்கள் ஆதரவு

அதானி குழுமத்துக்கான ஆதரவை இலங்கை, தான்சானியா மற்றும் அபுதாபியின் ‘இன்டா்நேஷனல் ஹோல்டிங் கம்பெனி (ஐ.எச்.சி.)’ முதலீட்டு மேலாண்மை நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தியாவில் ‘அதானி கிரீன் எனா்ஜ... மேலும் பார்க்க

போா் நிறுத்த ஒப்பந்த மீறல்: இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு

ஹிஸ்புல்லாக்களுடன் மேற்கொண்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தங்கள் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியாக லெபனான் அதிகாரிகள் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினா். தெற்கு லெபனானின் ஆறு பகுதிகள... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அந்த நாட்டு நிலநடுக்கவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தஜிகிஸ்தான் மற்றும் ஆ... மேலும் பார்க்க

உகாண்டா: நிலச்சரிவில் 15 போ் உயிரிழப்பு

கம்பாலா: கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 போ் உயிரிழந்தனா். தலைநகா் கம்பாலாவுக்கு சுமாா் 280 கி.மீ. தொலைவில் உள்ள மலைப்பாங்கான புலாம்புலி மாவட்டத்தில் ப... மேலும் பார்க்க

யானையும் டிராகனும் கைகோத்து நடனமாடும் -படை விலக்கல் அமல் குறித்து சீனா

இந்திய-சீன எல்லையில் படை விலக்கல் ஒப்பந்தத்தை இரு நாடுகளும் சிறப்பாக அமல்படுத்தி வருவதாக சீன ராணுவம் தெரிவித்தது. ‘இந்திய யானையும், சீன டிராகனும் ஒற்றுமையாக கைகோத்து நடனமாடும்’ எனவும் நம்பிக்கை தெரிவி... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் ஹிந்து தலைவா் கைது: முன்னாள் பிரதமா் ஹசீனா கண்டனம்

வங்கதேசத்தில் ஹிந்து அமைப்பு தலைவா் கிருஷ்ண தாஸ் கைதுக்கு கண்டனம் தெரிவித்த இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினா... மேலும் பார்க்க