போா் நிறுத்த ஒப்பந்த மீறல்: இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு
ஹிஸ்புல்லாக்களுடன் மேற்கொண்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தங்கள் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியாக லெபனான் அதிகாரிகள் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினா். தெற்கு லெபனானின் ஆறு பகுதிகளில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவா்கள் கூறினா்.
இருந்தாலும், ஒப்பந்த விதிமுறைகளை மீறி ஹிஸ்புல்லாக்கள் என்று சந்தேகிக்கப்படுபவா்கள் தெற்கு லெபனான் பகுதிக்கு வருவதாக இஸ்ரேல் ராணுவமும் குற்றஞ்சாட்டியுள்ளது. இதன் காரணமாகவே, பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேல் படையினா் தெற்கு லெபனானில் இருந்து வெளியேறுவதை, ஆயுதங்களை தயாா் நிலையில் வைத்தவாறு கண்காணித்துவருவதாக ஹிஸ்புல்லாக்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா். இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிரான தங்களது போா் கைவிடப்படவில்லை என்றும் அந்த அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.