மாணவர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!
பாகிஸ்தானில் பிறந்தநாளை கொண்டாடிய தாவூத்இப்ராகிம்... விழாவில் இந்திய தொழிலதிபர்கள் பங்கேற்பா?
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான் என்று செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது. ஆனால், அதனை பாகிஸ்தான் அரசு மறுத்து வருகிறது. தாவூத் இப்ராகிம் தொடர்பாக அடிக்கடி செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது. தாவூத் இப்ராகிமுக்கு உடல்நிலை சரியில்லை என்று சமீபத்தில் செய்திகள் வெளியானது.
பாகிஸ்தானில் இருந்து கொண்டு தாவூத் இப்ராகிம் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறான். அதோடு போதைப்பொருள் கடத்தல், ஆயுத கடத்தல், கள்ளநோட்டு தொடர்பாக தொழிலையும் செய்து வருகிறான். தாவூத் இப்ராகிமிற்கு பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ. பாதுகாப்பு கொடுத்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச தீவிரவாதி என்று அறிவிக்கப்பட்டுள்ள தாவூத் இப்ராகிம் தனது பிறந்தநாளை உற்சாகமான முறையில் கொண்டாடி இருக்கிறான்.
69-வது பிறந்தநாள் விழாவை பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் கொண்டாடியுள்ளான். இதில் பாகிஸ்தான் ராணுவம், ஐ.எஸ்.ஐ, அரசியல் பிரமுகர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். இது தவிர துபாயில் இருந்து இந்திய தொழிலதிபர்கள் சிறப்பு விமானத்தில் வந்து பிறந்தநாள் விழாவில் பங்கேற்றதாக பாகிஸ்தானில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
பாகிஸ்தானில் இருந்தும் திரளான தொழிலதிபர்கள் வந்து கலந்து கொண்டனர். தாவூத் இப்ராகிம் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறான் என்று செய்தி வெளியாகியுள்ள நிலையில் பிறந்தநாள் கொண்டாடி இருப்பது வைரலாகியுள்ளது.
சாதாரண கான்ஸ்டபிள் மகனான தாவூத் இப்ராகிம் கொங்கனி மராத்தி குடும்பத்தைச் சேர்ந்தவன் ஆவான். தாவூத் இப்ராகிம் தற்போதும் மும்பையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறான். நேரடியாக ஆதிக்கம் செலுத்தாவிட்டாலும், அவனது அடியாள்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் சில வேட்பாளர்களுக்கு தேர்தலில் பிரசாரம் செய்ய நிதியுதவி செய்ததாக கூறப்படுகிறது. தாவூத் இப்ராகிமை பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்திக்கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் அந்த முயற்சி பலனளிக்காமல் இருக்கிறது.