செய்திகள் :

பாக். வன்முறை: பாதியில் நாடு திரும்பிய இலங்கை ஏ அணி!

post image

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வன்முறையால் இலங்கை ஏ கிரிக்கெட் அணி பாதியில் நாடு திரும்பியுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரின் ஆதரவாளா்கள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பாதுகாப்புப் படை வீரா்கள் 6 போ் பலியாகினா்.

அதன்தொடர்ச்சியாக பாகிஸ்தானில் வன்முறை தீவிரம் அடைந்துவரும் நிலையில், பாகிஸ்தான் ஷாகீன்ஸ் மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான 50 ஓவர்கள் கொண்ட இரண்டு போட்டிகளில் விளையாடாமல் இலங்கை ஏ அணி நாடு திரும்பியுள்ளது. இதை பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரியமும் உறுதிபடுத்தியுள்ளது.

முதல் போட்டி கடந்த திங்கள்கிழமை ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்ற நிலையில் அந்தப் போட்டி பாகிஸ்தான் ஷாகீன்ஸ் அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. மற்ற இரு போட்டிகள் இன்று(நவ.27) மற்றும் வெள்ளிக்கிழமை(நவ.29) இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்தது.

பாகிஸ்தான் முழுவதும் ஏற்பட்டுள்ள வன்முறையைக் கட்டுப்படுத்த அதிகளவில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் மத்திய உள்துறை அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் அடுத்தாண்டு பிப்ரவரியில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இன்னும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டவில்லை. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியும் பாகிஸ்தானுக்குச் செல்ல மறுத்துவருகிறது.

2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்குப் பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் உடனான எந்த இருதரப்பு போட்டிகளிலும் விளையாடவில்லை. ஆனால், உலகக்கோப்பை, ஆசியக்கோப்பைகளில் விளையாடியிருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். அதற்கு இரண்டு நாள்கள் முன்னதாக, நவம்பர் 29 ஆம் தேதி ஆலோசனை நடைபெறவுள்ளது.

இந்திய அரசு தற்போதைய நிலையில் உறுதியாக இருப்பதால், பாகிஸ்தானுக்கு வெளியே ஹபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி நடத்தவும் விருப்பம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காதது ஏன்? பென் ஸ்டோக்ஸ் விளக்கம்!

இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காததன் காரணம் குறித்து பேட்டியளித்துள்ளார். 32 வயதாகும் பென் ஸ்டோக்ஸ் கடைசியாக சென்னை அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்டார். காயம் காரணமாக பந... மேலும் பார்க்க

டெஸ்ட் தரவரிசை: மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார் ஜஸ்பிரித் பும்ரா!

டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற... மேலும் பார்க்க

28 பந்துகளில் அதிரடி சதம்! ரிஷப் பந்த் சாதனையை அடித்து நொறுக்கிய குஜராத் வீரர்!

சையத் முஷ்டாக் அலி கோப்பையில் 28 பந்துகளில் அதிரடியாக சதமடித்து குஜராத் வீரர் புதிய சாதனை படைத்துள்ளார்.சையத் முஷ்டாக் அலி கோப்பையில் திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வீரரான உர்வில் பட்ட... மேலும் பார்க்க

இங்கிலாந்து தொடர்: இந்தியாவை வெல்ல உதவிய நியூசி. வீரருக்கு அணியில் இடமில்லை!

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தொடருக்கான நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் நாதன் ஸ்மித் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமாகிறார். மேலும், இந்... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தி மே.இ.தீவுகள் அபார வெற்றி!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அபார வெற்றி பெற்றுள்ளது.மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் வங்கதேசத்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இந்தப்... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: பிளேயிங் லெவனை அறிவித்த தென்னாப்பிரிக்க அணி!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை தென்னாப்பிரிக்க அணி அறிவித்துள்ளது.இலங்கை அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இர... மேலும் பார்க்க