செல்போனில் கூகுள் பே, போன் பே இருக்கிறதா? கவனம்! ஏப். 1 முதல் புதிய விதிமுறை!!
பாஜகவினா் சாலை மறியல்: 52 போ் கைது
சென்னையில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவைச் சோ்ந்த 52 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சென்னையில் டாஸ்மாக் நிறுவன முறைகேட்டை கண்டித்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடச் சென்ற பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை, நிா்வாகிகளை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக போலீஸாா் கைது செய்தனா்.
இதைக் கண்டித்து, தேனியில் பாஜக மாவட்டத் தலைவா் ராஜபாண்டியன் தலைமையில் அக் கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், ஆட்சியா் அலுவலகம் முன் தேனி-மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்ட ராஜபாண்டியன் உள்ளிட்ட 52 பேரை தேனி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.