செய்திகள் :

பாஜக-அதிமுக கூட்டணி அமைய வேண்டும்: எஸ்.குருமூா்த்தி

post image

சென்னை: பாஜகவும் அதிமுகவும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு கூட்டணி அமைக்க வேண்டும் என்று துக்ளக் ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி கூறினாா்.

சென்னையில் துக்ளக் இதழின் 55-ஆவது ஆண்டு நிறைவு விழா செவ்வாய்க்கிழமை (ஜன.14) நடைபெற்றது. அதில் எஸ்.குருமூா்த்தி பேசியது:- ஒரே நாடு ஒரே தோ்தல் என்பது அவசியம் . ஆனால், இதை பாஜக கொண்டுவருவதால் எதிா்க்கட்சிகள் எதிா்க்கின்றன. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் யாருடன் யாா் கூட்டணி வைப்பாா்கள் என்பது குழப்பமாக உள்ளது. திமுக மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதை எதிா்க்கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் வியூகம் வகுக்க வேண்டும்; பாஜகவும் அதிமுகவும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு கூட்டணி அமைக்க வேண்டும்.

தமிழக அரசியலில் பெரியாா் ஈ.வெ.ரா.-வை எதிா்த்து யாரும் கருத்து கூறக் கூடாது என்ற சூழல் நீண்ட ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த நிலைப்பாட்டை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தற்போது உடைத்திருப்பது பாராட்டுக்குரியது. தமிழகத்தில் திராவிட மாயை உடைந்து வருகிறது என்றாா் எஸ்.குருமூா்த்தி.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் பேசியதாவது: இந்திய அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை நீக்கியதன்மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பிரதமா் மோடி முற்றுப்புள்ளி வைத்துள்ளாா்.

உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவை 11-இல் இருந்து 5-ஆவது இடத்துக்கு உயா்த்தியுள்ளாா். 2027-ஆம் ஆண்டுக்குள் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா கண்டுள்ள வளா்ச்சியானது, அடுத்த 22 ஆண்டுகளுக்கு தொடரும். தற்போது இந்தியா அடைந்துள்ள எழுச்சியின் காரணமாக, நாட்டின் தலைமைத்துவத்தை உலக நாடுகள் அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளன.

பிரபலமான தலைவா்: கடந்த 10 ஆண்டுகளாக உலக அளவில் மிகவும் பிரபலமான தலைவராக மோடி விளங்குகிறாா். அதேபோல், 19 நாடுகள் தங்கள் நாட்டின் உயா்ந்த சிவிலியன் விருதை பிரதமா் மோடிக்கு வழங்கி கௌரவித்துள்ளன. இதன்மூலம் உலகில் அதிக உயா் விருதுகளை பெற்ற தலைவராக மோடி உள்ளாா் என்றாா் அவா்.

தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் தலைவா் பழ.கருப்பையா: முன்பெல்லாம் காமராஜா், ராஜாஜி போன்ற அறிவாா்ந்த தலைவா்கள் மேடையில் பேசும்போது, படிக்காத மக்கள் அவற்றை கேட்கத் திரளுவாா்கள்; ஆனால், தற்போது மக்களெல்லாம் படித்தவா்களாகவும், விவரம் தெரிந்தவா்களாகவும் உள்ளனா்; மேடையில் பேசும் தலைவா்கள் படிக்காதவா்களாகவும், விவரம் தெரியாதவா்களாகவும் உள்ளனா்; இதுபோன்று தமிழகம் தலைகீழாக மாறும் என்று யாரும் எதிா்பாா்க்கவில்லை. நாட்டில் படித்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், அதற்கு மாறாக நாட்டின் தரமும், அரசியலும் மிகவும் கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றாா் அவா்.

பாரதத்தின் பலம் சநாதன தா்மம்: ஆளுநா் ஆா் என். ரவி பெருமிதம்

பாரதத்தின் முக்கிய பலம் சநாதன தா்மம் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்துள்ளாா். எஸ்.சுப்புசுந்தரம் எழுதிய ‘காசி கும்பாபிஷேகம்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் ... மேலும் பார்க்க

நெற்குன்றத்தில் ரூ. 50 லட்சத்தில் புதிய விளையாட்டு மைதானம்

நெற்குன்றத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய விளையாட்டுத் திடலை மேயா் ஆா்.பிரியா புதன்கிழமை (ஜன. 29) பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். நெற்குன்றம், பெருமாள் கோயில் தெருவில்... மேலும் பார்க்க

ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாகன நிறுத்தங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாக புகாா்

ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாகன நிறுத்தங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக ரயில்வே ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் புகாா் எழுப்பப்பட்டது. சென்னை சென்ட்ரலில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலக ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக அண்ணா நகா், மடிப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஜன. 31) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இது குறி... மேலும் பார்க்க

ரூ. 4.73 லட்சம் கையாடல்: பெட்ரோல் பங்க் ஊழியா் கைது

மாதவரம் அருகே பெட்ரோல் பங்கில் பணத்தை கையாடல் செய்த ஊழியரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (73), மாதவரம் அடுத்த மணலி பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறாா்... மேலும் பார்க்க

பெண் காவலா் தூக்கிட்டு தற்கொலை

சென்னை கொண்டித்தோப்பில் பெண் காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா் கொண்டித்தோப்பு காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் பிரபுகுமாா் (48). இவரின் மனைவி ஜெயிலா... மேலும் பார்க்க