செய்திகள் :

பாடகர் ஸுபீன் கர்க் உடல் தகனம்!

post image

பிரபல அசாமிய பாடகர் ஸுபீன் கர்கின் உடல் செவ்வாய்க்கிழமை நண்பகல் தகனம் செய்யப்பட்டது.

அசாமி, ஹிந்தி மற்றும் வங்க மொழிகளில் முன்னணி பாடகராக வலம் வந்த ஸுபீன் கார்க் (வயது 52), சிங்கப்பூரில் ஆழ்கடல் சாகசத்தில் (ஸ்கூபா டைவிங்) ஈடுபட்டபோது விபத்தில் சிக்கி செப். 19 ஆம் தேதி மரணமடைந்தார்.

சிங்கப்பூரில் உடற்கூராய்வுக்கு பிறகு விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்ட ஸுபீன் கர்கின் உடல், அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டி மைதானத்தில் அஞ்சலிக்காக திங்கள்கிழமை வைக்கப்பட்டது. ஸுபினின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஸுபீன் கர்க் உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்த மக்கள்.

தொடர்ந்து, குவாஹாட்டி மருத்துவக் கல்லூரியில் எய்ம்ஸ் மருத்துவர்கள் மேற்பார்வையில் 2-வது முறையாக ஸுபீன் கார்கின் உடல் செவ்வாய்க்கிழமை(செப். 23) காலை 7.30 உடற்கூராய்வு செய்யப்பட்டது.

உடற்கூராய்வுக்குப் பிறகு ஸுபினின் உடலுக்கு பாரம்பரிய 'அசாமிய கமோசா' துணி போர்த்தப்பட்டு, இறுதிச் சடங்குக்காக ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது.

கம்ரூப் மாவட்டத்தில் உள்ள கமர்குச்சி கிராமத்தில் ஸுபீன் கர்க் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, கமர்குச்சி கிராமத்தில் ஸுபீன் கர்க் உடல், அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Singer Zubeen Garg cremated in Assam's Kamarkuchi NC village

இதையும் படிக்க : பாடகர் ஸுபின் கர்க்கிற்கு லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை! இறந்த பின்னரும் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்!

விப்ரோ நிறுவனரிடம் உதவிக் கோரும் கர்நாடக முதல்வர்!

பெங்களூரில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த உதவிக் கோரி, விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஸிம் பிரேம்ஜிக்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். பெங்களூரின் வெளிவட்டச் சாலையில் நிலவும் ... மேலும் பார்க்க

ராகுலின் கேள்விக்கு தேர்தல் ஆணையம்தான் பதிலளிக்க வேண்டும்; பாஜகவினர் அல்ல! சரத் பவார்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தியின் கேள்விக்கு தேர்தல் ஆணையம்தான் பதிலளிக்க வேண்டுமே தவிர, பாஜகவினர் அல்ல என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவார் தெரிவித்துள்ளார்... மேலும் பார்க்க

சமூகங்களுக்கிடையே வேறுபாடுகளைக் களைய முதல்வர் முன்வர வேண்டும்: சரத் பவார்!

மகாராஷ்டிரத்தில் நடைபெறும் இடஒதுக்கீடு மோதலுக்கு மத்தியில், பல்வேறு சமூகங்களுக்கிடையேயான பிரச்னையைத் தீர்ப்பதில் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் முன்னிலை வகிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் ச... மேலும் பார்க்க

வெள்ளத்தில் மிதக்கும் கொல்கத்தா! மின்சாரம் பாய்ந்து 7 பேர் பலி!

கொல்கத்தாவில் திங்கள்கிழமை இரவுமுதல் விடியவிடிய பெய்த கனமழை காரணமாக மாநகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.துர்கா பூஜை கொண்டாட்டங்கள் தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தா... மேலும் பார்க்க

சீனா சென்ற மார்க்சிஸ்ட் கட்சிக் குழு!

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பை ஏற்று, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர் சீனா சென்றுள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பன்னாட்டுத் துறையின் அழைப்பை ஏற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்... மேலும் பார்க்க

பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு நினைவிடம்! - அசாம் அரசு அறிவிப்பு

மறைந்த அசாமிய பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு, அவரது உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்க அசாம் அரசு திட்டமிட்டுள்ளது.அசாமி, ஹிந்தி மற்றும் வங்க மொழிகளில் முன்னணி பாடகராகவும், இந்த... மேலும் பார்க்க