Parthiban: "முதலில் இதுபோன்ற செய்திகள் மரணமடைய வேண்டும்" - வதந்தி குறித்துக் கொத...
"கற்பை நிரூபிக்கக் கொதிக்கும் எண்ணெய்யில் விரலை விடு" - குஜராத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் 30 வயது பெண் தனது கற்பை நிரூபிக்கக் கொதிக்கும் எண்ணெய்க்குள் விரலை விட வேண்டும் என அவரது நாத்தனாருடன் இன்னும் மூவர் இணைந்து வற்புறுத்தியதால் அவருக்குப் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த செவ்வாய் (செப் 16) விஜாப்பூர் தாலுகாவில் உள்ள கெரிட்டா என்ற கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. இது குறித்து வெள்ளிக்கிழமை (செப் 19) காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருடைய சகோதரி ஜமுனா தாக்கூர், அவரது கணவர் மனுபாய் தாக்கூர் உடன் மேலும் இருவர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் துணை காவல் கண்காணிப்பாளர் தினேஷ்சிங் சவுகான் தெரிவித்திருக்கிறார்.
मुस्लिम महिलाओं की कथित बदहाली पर ज्ञान देने वाले नमूनों को यह खबर पढ़नी चाहिए, ज्ञान की आवश्यकता उनके अपने लोगों को है।
— Mohd Shadab Khan (@VoxShadabKhan) September 20, 2025
मोदी जी के गुजरात में, चरित्र पर शक होने पर एक महिला को उसकी नणंद और रिश्तेदारों ने उबलते तेल में हाथ डालने के लिए मजबूर किया।
जब उसने मना किया तो पीटा और… pic.twitter.com/cMAta2Nxr6
குற்றவாளிகள் நால்வரும் தலைமறைவாகியிருக்கின்றனர் என்கிறது என்.டி.டி.வி-யின் செய்தி. பாதிக்கப்பட்டவர் விஜாப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அவர் கையை எண்ணெய்யில் வைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியிருக்கிறது. அதுவே காவலர்கள் நடவடிக்கை எடுக்கக் காரணமாக இருந்துள்ளது.
இதுகுறித்து பேசிய காவல் கண்காணிப்பாளர் தினேஷ்சிங் சவுகான், "பாதிக்கப்பட்ட பெண்ணான ஜமுனா தாக்கூர் அவரது கணவருக்கு உண்மையாக இல்லை எனச் சந்தேகித்துள்ளார். இதனால் மனுபாய் மற்றும் வேறு இருவருடன் இணைந்து அவரை எண்ணெய்யில் விரல் வைக்கும் சடங்கைச் செய்ய வைத்துள்ளார்" என்றார்.
பாதிக்கப்பட்ட பெண் கற்புடன் இருந்தால் அவரது விரலுக்கு எதுவும் ஆகாது என்றும் கூறியுள்ளார். இந்த மூட நம்பிக்கை சமூக வலைத்தளங்களில் விவாதத்தை எழுப்பியிருக்கிறது. இது குறித்த உங்களது கருத்தை கமெண்டில் தெரிவியுங்கள்!