செய்திகள் :

'பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் பயத்தில் வாழ்கின்றனர்' - ஹத்ராஸ் சந்திப்பு பற்றி ராகுல்!

post image

ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த 19 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில நாள்களில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்போது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஹத்ராஸ் சிறுமியின் குடும்பத்தினரை இன்று ராகுல் காந்தி நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

'இன்று நான் ஹத்ராஸுக்குச் சென்றேன். 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வெட்கக்கேடான, துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்தேன். சந்திப்பின்போது அவர்கள் சொன்ன விஷயங்கள் என்னை உலுக்கியது.

அந்த குடும்பத்தினர் இன்னும் பயத்தில் வாழ்கிறார்கள். அவர்கள் குற்றவாளிகள்போல் நடத்தப்படுகிறார்கள். அவர்களால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. அவர்கள் எல்லா நேரங்களிலும் துப்பாக்கிகள், கேமராக்களின் கண்காணிப்பில் உள்ளனர்.

பாஜக அரசு அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்றவில்லை. அரசு வேலை வழங்கப்படும், வேறு இடத்திற்கு மாற்றுவோம் என எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்குவதற்கு பதிலாக, அரசு அந்த குடும்பத்தினருக்கு பல்வேறு கொடுமைகளைச் செய்து வருகிறது. மறுபுறம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுதந்திரமாக சுற்றித்திரிகின்றனர்.

இந்தக் குடும்பத்தின் விரக்தி, பாஜகவால் தலித்துகள் மீது நடத்தப்படும் கொடுமைகளின் உண்மையைக் காட்டுகிறது.

ஆனால் இந்த குடும்பத்தை இந்த நிலையிலே விட்டுவிடமாட்டோம். அவர்களுக்கு நீதி கிடைக்க முழு பலத்துடன் போராடுவோம்' என்று பதிவிட்டுள்ளார்.

வழிபாட்டுத் தலங்கள் குறித்து எந்த உத்தரவையும் பிறபிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

மசூதி உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களில் ஆய்வு செய்வது தொடர்பாக கீழமை நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் வழக்கி... மேலும் பார்க்க

உலக சாம்பியன் குகேஷுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

உலக செஸ் சாம்பியன் குகேஷ் வெற்றிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.உலக செஸ் சாம்பியன் குகேஷின் வெற்றியைத் தொடர்ந்து, அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி... மேலும் பார்க்க

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மகளுக்காக நீதி கோரி ராகுலுக்கு கடிதம்!

உத்தரப் பிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, பலியான பெண்ணுக்கு நீதி வேண்டி ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் 2020 ஆம் ஆண்டில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொட... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு: ஐடி பங்குகள் மட்டும் உயர்வு!

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (டிச. 12) சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 236 புள்ளிகள் சரிவுடனும் நிஃப்டி 2600 புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது.பங்குச் சந்தையில் ஐடி துறை தவிர மற்ற துறைகள் அனைத்தும் 2%... மேலும் பார்க்க

மணிப்பூரைச் சொன்னால் கரீனா கபூரை சந்திக்கிறார் மோடி: காங்கிரஸ்

பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லாமல் கரீனா கபூர் குடும்பத்தினரைச் சந்தித்தை காங்கிரஸ் தலைவர் விமர்சித்துள்ளார்.மறைந்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் ராஜ் கபூரின் திரைப்பயணத்தைக் கொண்டாடும் விதமாக நாளை (டி... மேலும் பார்க்க

மணிப்பூர் நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் முயற்சி: பைரன் சிங்

மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு காணக் கால அவகாசம் எடுக்கலாம் என்று அந்த மாநில முதல்வர் என்.பைரன் சிங் தெரிவித்துள்ளார். நூபி லானின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய அவர், ம... மேலும் பார்க்க