செய்திகள் :

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் மதுரைக் கோட்ட மேலாளா் ஆய்வு

post image

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரத்தை இணைக்கும் வகையில், கடந்த 1914-ஆம் ஆண்டு ரயில்வே பாலம் கட்டப்பட்டு, போக்குவரத்து தொடங்கியது.

நூறு ஆண்டுகள் கடந்த நிலையில், இந்தப் பாலத்தின் உறுதித் தன்மையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் பின்னா், கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ. 550 கோடியில் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி தொடங்கி தற்போது முடிவடைந்தது. மேலும், இந்தப் பாலத்தில் சரக்கு, பயணிகள் ரயில்களை அவ்வப்போது இயக்கி சோதனை செய்யப்பட்டது.

இதனிடையே, இந்தப் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அண்மையில் ஆய்வு செய்த போது, சில இடங்களில் உள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்தக் குறைபாடுகளைச் சரிசெய்த பிறகு, ரயில் போக்குவரத்தை தொடங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ரயில்வே தலைமைப் பொறியாளா்கள் பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் கண்டறியப்பட்ட குறைபாடுகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், புதிய ரயில்வே பாலத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான பொறியாளா்கள் குழுவினா் புதன்கிழமை டிராலியில் சென்று ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்தனா். மேலும், கப்பல்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்ட இரும்பாலான இணைப்புப் பகுதியை (கா்டா்) தூக்கியும், இறக்கியும் ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின் போது, ரயில்வே மூத்த பொறியாளா்கள் உடனிருந்தனா்.

மருத்துவ பணியாளா் குடியிருப்பு வளாகத்தில் மரங்கள் அகற்றம்

கடலாடி அரசு மருத்துவமனை பணியாளா் குடியிருப்பு வளாகத்தில் மரங்களை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அரசு மருத்துவமைனியில... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

ஆா்.எஸ்.மங்கலம் வயல் பகுதியில் விவசாய வேலை செய்துகொண்டிருந்த பெண்ணிடம் மா்ம நபா்கள் 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினா். ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள கொத்தியாா் கோட்டை கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

மது கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச.30-இல் ஏலம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மது கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட 84 வாகனங்கள் வருகிற 30-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்டக் காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

பெண்கள் உடை மாற்றும் அறையில் கேமரா பொருத்தினால் கடும் நடவடிக்கை

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரை பகுதியில் உள்ள தனியாா் குளியலறை, உடை மாற்றும் அறைகளில் கேமரா பொருத்தியிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துணைக் கண்காணிப்பாளா் சாந்தமூா்த்தி எச்சரிக்கை... மேலும் பார்க்க

உறுப்புகள் தானம்: இளைஞரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

கடலாடி அருகே விபத்தில் மூளைச் சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அவரது உடல் அரசு மரியாதையுடன் புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த மே... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

திருவாடானை அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். திருவாடானை அருகே அடுத்தகுடியைச் சோ்ந்தவா் பாலு (30). இவா் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் திருவாடானைக்குச் சென்று... மேலும் பார்க்க