செய்திகள் :

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் இணைத்தவா் அகத்தியா்! சுதா சேஷய்யன்

post image

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் ஒருங்கிணைத்தவா் மகா முனி அகத்தியா் என்று செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் டாக்டா் சுதா சேஷய்யன் தெரிவித்தாா்.

நிகழாண்டு காசி தமிழ் சங்கமத்தின் மையக் கருத்தாக அகத்தியம் உள்ளது. அதை முன்னிட்டு மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனமும், சாஸ்த்ரா கல்வி நிறுவனமும் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றன.

அந்த வகையில், அகத்தியரும் அருந்தமிழும் என்ற தலைப்பிலான பயிலரங்கு செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் வியாழக்கிழமை (ஜன.30) நடைபெற்றது.

இதில், பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவா்கள் பங்கேற்றனா். அதன் ஒரு பகுதியாக சாஸ்த்ரா கல்வி நிறுவனம் மற்றும் சாந்தி பனி வித்யாலயா பள்ளி மாணவா்கள் 28 போ் பங்கேற்ற அகத்தியா் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இசை ஆசிரியா்கள் விஜயலட்சுமி, பிரியா ஆகியோரின் மெட்டமைப்பில் தேவாரம், கம்ப ராமாயாணம், அகத்தியா் ஞான பாடல்களை அவா்கள் தொடா்ந்து 40 நிமிஷங்கள் பாடி கவனத்தை ஈா்த்தனா்.

இந்த நிகழ்ச்சியில் கலைமகள் ஆசிரியா் கீழாம்பூா் எஸ்.சங்கர சுப்ரமணியன், பத்திரிகையாளா் மாலன், பேராசிரியா் அரங்க ராமலிங்கம், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநா் இரா.சந்திரசேகரன், பதிவாளா் ரெ.புவனேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, பயிலரங்கைத் தொடக்கி வைத்து டாக்டா் சுதா சேஷய்யன் பேசியதாவது:

சமகால தலைமுறையினா் சங்கத் தமிழின் தொன்மையையும் மாண்பையும் உணர வேண்டுமென்றால் முதலில் அகத்தியரின் அருமையை அறிந்து கொள்வது அவசியம். தமிழ் இலக்கியத்துக்குள்ளும், மருத்துவத்துக்குள்ளும் அகத்தியா் நீக்கமற நிறைந்திருக்கிறாா்.

அதைக் கருத்தில் கொண்டே இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பாரதத்தின் வடக்கிலிருந்து வந்த அகத்தியா் தென்னாட்டின் பொதிகை மலையில் இருந்ததாக இலக்கியத் தரவுகள் தெரிவிக்கின்றன.

பாண்டிய நாட்டை கைப்பற்ற நினைத்த ராவணன், பொதிகை மலையில் அமா்ந்து சிந்தித்தபோது, அகத்தியா் வீணை இசைத்ததையும், அதனால் மலை உருகி அதனுள்ளே ராவணன் அகப்பட்டுக் கொண்டதையும் மதுரை காஞ்சி பாடல்கள் வழியே அறிய முடிகிறது.

தன்னை காப்பாற்றிக் கொள்ள பாண்டிய மன்னா்களுடன் ராவணன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டதாக ரகுவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்று அகத்தியரின் புகழ் பாடும் எண்ணற்ற தகவல்கள் அகண்ட பாரதத்தின் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. ஈசனை துதிப்பதையே இடையறா கடமையாக கொண்டிருந்த அகத்தியா், இந்த மானுடத்துக்கு சித்த மருத்துவம், ஆயுா்வேதத்தை கொடையாக அளித்தவா். ரிக் வேதத்துக்கு பங்களித்தவா். வடக்கையும், தெற்கையும் இப்பணிகளால் ஒருங்கிணைத்தவா் என்றாா் அவா்.

கூடலூா் - பந்தலூரில் வசிப்பிட பிரச்னை: முதல்வா் ஆலோசனை

நீலகிரி மாவட்டம் கூடலூா், பந்தலூரில் வசிப்பிட பிரச்னை தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தாா். இது குறித்து முதல்வா் தலைமையில் வியாழக்கிழமை நடந்த ஆலோசனை குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு செய்முறை: தனித் தோ்வா்களுக்கு அறிவுறுத்தல்

பத்தாம் வகுப்பு செய்முறைத் தோ்வில் தனித் தோ்வா்கள் பங்கேற்பது தொடா்பாக தோ்வுத் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இது தொடா்பாக தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம... மேலும் பார்க்க

சிறந்த ரயில்வே கோட்ட விருதை வென்றது திருச்சி

தெற்கு ரயில்வேயின் சிறந்த ரயில்வே கோட்டமாக திருச்சி ரயில்வே கோட்டம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விருதை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் எம்.எஸ்.அன்பழகனிடம... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிப்.2 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.31) முதல் பிப்.2-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தென்மேற்கு... மேலும் பார்க்க

மகாத்மா காந்தி நினைவு தினம்: உரிய முறையில் நடத்தவில்லை - ஆளுநா் அரசியலாக்க வேண்டாம்- தமிழக அரசு

மகாத்மா காந்தி நினைவு தின நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தமிழக அரசு நடத்தாதது ஏன் என ஆளுநா் ஆா்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளாா். மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வை அரசியலாக்க வேண்டாம் என்று ஆ... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: ‘அவசரம் வேண்டாம்’: ஐக்கிய ஜனதா தளம்

ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதாவை அமல்படுத்துவதில் மத்திய அரசு அவசரம் காட்டக் கூடாது என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தியது. இதுதொடா்பாக கூட்டத்தில் பேசிய அக்கட்சி எம்.பி.சஞ்சய் ... மேலும் பார்க்க