செய்திகள் :

பாரதியார் பல்கலை.க்குள் புகுந்த சிறுத்தை! மாணவர்கள் வெளியேற்றம்!

post image

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்துக்குள் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது.

உடனடியாக பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, வளாகத்தில் இருந்த மாணவர்களை வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளனர்.

இதையும் படிக்க : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 58 கட்சிகள் பங்கேற்பு! யார்யார்?

கோவை மாவட்டத்தில் மருதமலை செல்லும் சாலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பாரதியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

இந்த நிலையில், பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக இன்று காலை விளையாட்டுப் பயிற்சிக்கு மைதானத்துக்கு வருகை தந்த மாணவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்துக்கு வருகைதந்த கோவை சரக வனத்துறையினர் சிறுத்தையில் கால்தடத்தை உறுதி செய்துள்ளனர்.

உடனடியாக சிறுத்தையை பிடிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். கேமிராக்கள், கூண்டுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்துக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், விளையாட்டுப் போட்டிக்காக பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்துள்ள மாணவர்களை விடுதியில் பாதுகாப்பாக தங்கவைத்துள்ளனர்.

இதனிடையே, பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த விளையாட்டுப் போட்டிகள் உள்பட அனைத்து நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சநாதன விவகாரம்: உதயநிதிக்கு எதிராக புதிய வழக்குகள் பதிய தடை!

கடந்த 2023, செப்டம்பரில் சநாதன தா்மம் தொடா்பான சா்ச்சைப் பேச்சு விவகாரத்தில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புதிய வழக்குகள் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.சென்னையில் 202... மேலும் பார்க்க

கோடை: மேட்டுபாளையம் - உதகை சிறப்பு ரயில் அறிவிப்பு!

மேட்டுபாளையத்தில் இருந்து உதகைக்கு கோடை கால சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மேட்டுபாளையம் - உதகை மலை ரயிலில் பயணிக்க உள்ளூர் மக்கள் முதல் சர்வதேச சுற்றுலாப் பய... மேலும் பார்க்க

சென்னை: விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பலி!

சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் சாலை விபத்தில் இரண்டு கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை காலை பலியாகினர்.மேலும், விபத்துக்குள்ளான காரில் பயணித்த இரண்டு மாணவிகள், ஒரு மாணவர் என 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்ப... மேலும் பார்க்க

தூத்துக்குடி தாய், மகள் கொலை: ட்ரோன் உதவியுடன் தேடப்பட்ட குற்றவாளி சுட்டுப் பிடிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தாய் , மகள் கொலை வழக்கில் ட்ரோன் கேமரா உதவியுடன் தேடப்பட்டு வந்த குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுக் காவல்துறையினர் வியாழக்கிழமை காலை பிடித்தனர்.எட்டயபுரம் மேலநம... மேலும் பார்க்க

ஹிந்தி வெறியர்கள்தான் தேசதுரோகிகள்: முதல்வர் ஸ்டாலின்

உண்மையான பேரினவாதிகளும் தேசதுரோகிகளும் ஹிந்தி வெறியர்கள்தான் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மும்மொழிக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால், தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்க ... மேலும் பார்க்க

தமிழகத்தில் மக்களாட்சி பெயரில் மன்னா் ஆட்சி- ஆா்.பி. உதயகுமாா்

தமிழகத்தில் மக்களாட்சி எனக் கூறி கொண்டு மன்னராட்சி நடக்கிறது என தமிழக சட்டப்பேரவை எதிா்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா். செங்கோட்டையில் அண்ணாதொழிற்சங்கம் சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்களுக்... மேலும் பார்க்க