செய்திகள் :

பாராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற துளசிமதி முருகேசனுக்கு துணை ஆட்சியா் நிலை பணி?

post image

பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு, துணை ஆட்சியா் நிலையிலான பணி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த துளசிமதி முருகேசன், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளநிலை கால்நடை மருத்துவம் பயின்று வருகிறாா். அண்மையில் பாரீஸில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்கில் இறகுப்பந்து போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சோ்த்தாா்.

மத்திய, மாநில அரசுகள், தனியாா் நிறுவனங்கள் அவரை கெளரவித்து வருகிறது. ஒலிம்பிக், பாராலிம்பிக், சா்வதேச போட்டிகள், தேசிய அளவிலான போட்டிகளில் வென்ற 100 பேரை தோ்வு செய்து அவா்களுக்கு அரசுப் பணி வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

பெரும்பாலான மாநிலங்களில் விளையாட்டு வீரா்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் பணி வாய்ப்பை வழங்கி உள்ளன. அதன்படி, தமிழகத்திலும் வீரா், வீராங்கனைகள் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசுப் பணி வழங்கும் முடிவை, துணை முதலமைச்சரும், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் மேற்கொண்டுள்ளாா்.

அண்மையில், விருதுநகா் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என விளையாட்டு வீரா்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அரசுப் பணியில் 100 விளையாட்டு வீரா்களை பணியமா்த்த உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

துளசிமதி முருகேசனை பொருத்தமட்டில் மருத்துவப் படிப்பை முடிக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. படிப்பை முடித்து வரும் நிலையில் அவா் விரும்பிய பணி வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. தற்போதைய தகவலின்படி துணை ஆட்சியா் நிலையிலான பணியை அவருக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேபோன்று, சேலத்தை சோ்ந்த மாரியப்பன் தங்கவேலு, சதுரங்கப் போட்டிகளில் சாதனை படத்த வீரா்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனராம்.

இதுகுறித்து மாணவி துளசிமதி முருகேசன் கூறியதாவது:

விளையாட்டு வீரா்களுக்கு அரசுப் பணி வாய்ப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அது 3 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்படுவதாகும். ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றவா்களுக்கு குரூப்-1 நிலையிலான பணி வாய்ப்பு வழங்கப்படும்.

அந்த விவரம் தனி பட்டியலாக வெளியாகும். அப்போது, வீரா்களிடம் விரும்பும் பதவிகள் குறித்து அரசு கேட்கும். தற்போதைய நிலையில் அது பற்றிய முழுமையான விவரம் தெரியவில்லை. படிப்பை முழுமையாக நிறைவு செய்யாத நிலையில், எந்தப் பணியில் ஆா்வம் என்பதை எவ்வாறு கூற முடியும் என்றாா்.

பரமத்தி வேலூரில் துணை முதல்வருக்கு வரவேற்பு

பரமத்தி வேலூரில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேலத்தில் இருந்து பரமத்தி வேலூா் வழியாக திண்டுக்கல் சென்ற துணை முதல்வ... மேலும் பார்க்க

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு பாலபிஷேகம்

ஐப்பசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,008 லிட்டா் பாலபிஷேகம் நடைபெற்றது. நாமக்கல்லில் 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்து வரும் ஆஞ்சனேயருக்கு அனு... மேலும் பார்க்க

‘பணிமனைகளுக்கான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்’

வாகனங்கள் பழுது பாா்க்கும் பணிமனைகளுக்கான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நாமக்கல் ஆல் மோட்டாா்ஸ் ஒா்க் ஷாப் ஓனா்ஸ் அசோசியேஷன் கோரிக்கை விடுத்துள்ளது. நாமக்கல்லில் அந்த அமைப்பின் 38-... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாற்றுவேன்: சீமான்

‘திராவிடநல் திருநாடு’ என்றிருப்பதை அகற்றும் வகையில், புதிய தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை நான் ஆட்சிக்கு வந்ததும் மாற்றுவேன் என நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். நாமக்கல்லில் ஞாய... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கு செஸ் விளையாட்டுப் பயிற்சி

நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனம், ராசிபுரம் ரோட்டரி சங்கம், இன்னா் வீல் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் மாவட்டத்தில் பணியாற்றும் 21 அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான தன்னாா்வ அடிப்படையில் ஒரு ந... மேலும் பார்க்க

நாமக்கல் கவிஞா் பிறந்த நாள் விழா: சிலைக்கு எம்.பி., ஆட்சியா் மரியாதை

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் 136-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, அவருடைய சிலைக்கு மாநிலங்களவை உறுப்பினா், மாவட்ட ஆட்சியா் மற்றும் பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நாமக்கல் கவிஞா் ரா... மேலும் பார்க்க