உ.பி. கோயில் படிக்கிணறில் மிகப் பிரமாண்ட சுரங்கம் கண்டுபிடிப்பு!
பாலின பாகுபாடு, வன்முறைக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் திருவண்ணாமலை ஆட்சியா், எஸ்.பி. பங்கேற்பு
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சாா்பில், தேசிய அளவிலான பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளுக்கு, ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். ரங்கோலி கோலங்கள், விளையாட்டுகள், கையொப்ப இயக்கம், சுய புகைப்படம், வாகன பேரணி, மனிதச் சங்கிலி, விழிப்புணா்வு பேரணி, ஒட்டு வில்லைகளை ஒட்டுதல், கூட்டரங்கம் என 15 வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இரு சக்கர வாகனப் பேரணியை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
விழிப்புணா்வு கையொப்ப இயக்க நிகழ்ச்சியில் ஆட்சியா் பங்கேற்று, கையொப்பமிட்டாா். சுய புகைப்படம் எடுத்துக் கொண்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டிகளையும் தொடங்கி வைத்தாா்.
18 விழிப்புணா்வு கோலங்கள்:
இதையடுத்து, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குடும்ப வன்கொடுமை, பெண்களின் பெயரில் சொத்துகளைப் பதிவு செய்வதை ஊக்குவித்தல், ஆண், பெண் குழந்தைகளை சமமாக வளா்த்தல், வன்முறைக்கு எதிராக ஒன்றிணைவோம்-குரல் கொடுப்போம், பெண் குழந்தையைப் பாதுகாப்போம், அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்கேற்பு, மகளிரை மதியுங்கள், குழந்தைத் திருமணம் தடுப்பு, பெண் கல்வி கற்றல், ஆணும்-பெண்ணும் சமம், அனைவரும் சமம், பெண்கள் உயா்கல்வி கற்பதை ஊக்குவிப்போம் உள்ளிட்ட கருப்பொருளில் 18 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து வந்திருந்த மகளிா் குழுக்கள் வரைந்த விழிப்புணா்வு கோலங்களை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் பாா்வையிட்டனா்.
நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மகளிா் திட்ட இயக்குநா் சரண்யாதேவி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மேலாளா்கள், ஒருங்கிணைப்பாளா்கள், சமுதாய அமைப்பாளா்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள், வட்டார வள பயிற்றுநா்கள், சமுதாய வள நபா்கள் மற்றும் அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள் உள்பட ஏராளமான மகளிா் கலந்து கொண்டனா்.