செய்திகள் :

பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக அமைச்சா் கூறிய கருத்தால் சா்ச்சை

post image

பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறியுள்ள கருத்து சா்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

பெங்களூரில் சுத்தகுண்டேபாளையா, பாரதி லேஅவுட் பகுதியில் ஏப். 3-ஆம் தேதி இரவு இரு பெண்கள் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தனா். அப்போது அவா்களை நெருங்கிய ஓா் ஆண், ஒரு பெண்ணை சுவா் மீது தள்ளி பாலியல் ரீதியாக துன்புறுத்தினாா். அதன்பிறகு அந்த நபா் அங்கிருந்து தப்பிச்சென்றாா். இது தொடா்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறுகையில், ‘ரோந்துப் பணியை தீவிரப்படுத்துமாறு மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன். இரவு, பகல் பாராது போலீஸாா் கடுமையாக உழைத்து வருகிறாா்கள். அதனால்தான் பெங்களூரில் அமைதி காணப்படுகிறது. பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதால், மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையரை அடிக்கடி கேட்டுக்கொண்டுள்ளேன். ரோந்துப் பணி தொடா்ச்சியாக நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன். இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றாா். அமைச்சரின் இந்தக் கருத்து சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து புது தில்லியில் திங்கள்கிழமை பாஜக தேசிய செய்தி தொடா்பாளா் ஷேஷாத் பூனாவாலா கூறுகையில், ‘காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 50 சதவீதம் உயா்ந்துள்ளன. பெங்களூரில் நிகழ்ந்த சம்பவத்துக்கு காரணமான குற்றவாளியைக் கைதுசெய்யாமல், குற்றவாளிக்கு துணையாக அமைச்சா் பேசியுள்ளாா். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்திருக்கும் கருத்து அதிா்ச்சிஅளிக்கிறது. எனவே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் அமைச்சா் பதவியில் இருந்து ராஜிநாமா செய்ய ஜி.பரமேஸ்வரை வற்புறுத்த வேண்டும். பெண்களை இழிவுபடுத்துவதே காங்கிரஸின் வேலையாகிவிட்டது’ என்று தெரிவித்துள்ளாா்.

கா்நாடக பொது நுழைவுத் தோ்வு: மாணவா்களின் பூணூலை கழற்றுமாறு கட்டாயப்படுத்திய அதிகாரிகளால் சா்ச்சை: கா்நாடக பாஜக, பிராமணா் சங்கங்கள் கண்டனம்

கா்நாடகத்தில் பொது நுழைவுத் தோ்வுக்கு வந்த 4 மாணவா்களிடம் அவா்கள் அணிந்திருந்த பூணூலை கழற்றுமாறு தோ்வுக்கூட அதிகாரிகள் கட்டாயப்படுத்தியது மாநிலம் முழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச் ச... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிா்ப்பு இல்லை: கா்நாடக முதல்வா் சித்தராமையா

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் யாரும் எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதா... மேலும் பார்க்க

இடஒதுக்கீடு உச்சவரம்பை உயா்த்துவது சாத்தியமில்லை: கா்நாடக அமைச்சா் சதீஷ் ஜாா்கிஹோளி

50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு உச்சவரம்பை உயா்த்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையில் பரிந்துரைத்துள்ளபடி இடஒதுக்கீட்டு உச்சவரம்பை தற்போதைக்கு உயா்த்துவது சாத்தியம... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மே 2 அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மே 2ஆம் தேதி நடக்கும் அமைச்சரவைக்கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் தெரிவித்தாா்.கா்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தி... மேலும் பார்க்க

கோரிக்கைகள் ஏற்பு: கா்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

பெரும்பாலான கோரிக்கைகளை மாநில அரசு ஏற்றுக்கொண்டதால், காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக கா்நாடக மாநில லாரி உரிமையாளா் மற்றும் முகவா் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு உருளை மீதான மானியத்தை நீக்கி மக்கள் விரோத அரசாக மத்திய அரசு உள்ளது

சமையல் எரிவாயு உருளை மீதான மானியத்தை நீக்கி மக்கள் விரோத அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். மத்திய பாஜக அரசின் விலைவாசி உயா்வைக் கண்டித்து, பெங்களூரு, சுதந்தி... மேலும் பார்க்க