செய்திகள் :

பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியல் ஆக்குவது ஏன்? உயர்நீதிமன்றம்

post image

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியல் ஆக்குவது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்த வெளிநபர், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், பாமக மகளிர் அணி சார்பில் சென்னையில் இன்று நடைபெறவிருந்த போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில், காவல்துறையின் எச்சரிக்கையை மீறி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடத்த முயன்ற பாமக மகளிர் அணி நிர்வாகி செளமியா அன்புமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிக்க : யார் அந்த சார்? நேர்மையான விசாரணைக்கு திருமாவளவன் கோரிக்கை!

இதனைத் தொடர்ந்து, பாமக போராட்டத்துக்கு அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக வழக்கறிஞர் பாலு மனு அளித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி. வேல்முருகன், அரசியல் விளம்பரத்துக்காக செய்யப்படும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க உத்தரவிட முடியாது எனத் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும், பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியல் ஆக்குவது ஏன்? என்று கட்சிகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் இருவருக்கு எச்எம்பிவி தொற்று: சுகாதாரத் துறை

தமிழகத்தில் இருவருக்கு எச்எம்பிவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.எச்எம்பிவி தொற்று புதிதல்ல என்றும், பல ஆண்டுகளாக இந்த வைரஸ் இருப்பதால் மக்கள் அச்சமடையத் தேவையில்ல... மேலும் பார்க்க

சட்டப்பேரவை நடவடிக்கைகள் அவசர காலத்தை நினைவூட்டுகிறது: ஆளுநர் மாளிகை

தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது என்று ஆளுநர் மாளிகை கூறியுள்ளது. 2025 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் ... மேலும் பார்க்க

தேசிய கீதம் இருமுறை இசைக்கப்பட வேண்டும் என்பது சட்டம்: அண்ணாமலை

ஆளுநர் வருகையின் போதும், விடைபெறும்போதும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பது சட்டத்தில் உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,'திமுக அரசு, தங்கள் ... மேலும் பார்க்க

உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம்

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி, ஒன்றியக் குழு, கிராமப்புற ஊராட்சி என, 3 அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளில், 5 ஆண்டுக்கு முன் நடைபெ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் மரபுகளை ஆளுநர் மாற்ற வற்புறுத்துவது ஏற்புடையதல்ல: திருமாவளவன்

தமிழ்நாட்டின் மரபை இன்னும் ஆளுநர் அறிந்திராமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று... மேலும் பார்க்க

பொங்கலுக்கு 14,104 சிறப்புப் பேருந்துகள்!

பொங்கல் பண்டிகையையொட்டி 14,104 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் போக்குவரத்து துறை அதிகாரிகள், காவல் துறையுடன் இன்று... மேலும் பார்க்க