பா.ஜ.க-வுடன் உறவா? பகையா? குழப்பியடிக்கும் எடப்பாடி!
கடந்த நவம்பர் 6-ம் தேதி எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்ற அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ' தி.மு.க-தான் நமது எதிரி. அவர்களை மட்டும் விமர்சனம் செய்தால்போதும். வேறு யாரையுமே விமர்சனம் செய்ய அவசியமில்லை' என்று பேசிருந்தார் பொதுச் செயலாளர் எடப்பாடி.
இதன்மூலம், பா.ஜ.க-வுடன் எடப்பாடி மீண்டும் நெருங்க வாய்ப்பு இருக்கிறதென்று கூறப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பா.ஜ.க-வுடன் கூட்டணி குறித்து கேள்விக்கு, ' ஒத்த கருத்துடைய கட்சியுடன் அ.தி.மு.க கூட்டணி அமைக்க தயார்.
பா.ஜ.க உடன் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்ய முடியும்' என்று பதிலளித்தார் எடப்பாடி. இதன்மூலம், பா.ஜ.க-வுடன் விரைவில் எடப்பாடி கூட்டணி அமைக்க போகிறார் என்று ஓரளவுக்கு உறுதி செய்தனர் கட்சி நிர்வாகிகள். இந்நிலையில், பா.ஜ.க-வுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று முன்னாள் அமைச்சரும் அமைப்பு செயலாளருமான ஜெயக்குமார் உறுதியாக தெரிவித்து இருக்கிறர்.
இப்படி பா.ஜ.க-வுடன் கூட்டணியா? இல்லையா? என்று எடப்பாடி நிர்வாகிகளை குழப்பியடித்துக் கொண்டு இருக்கிறார். இதுகுறித்து அ.தி.மு.க அமைப்பு செயலாளர்கள் சிலரிடம் பேசும்போது, " கூட்டணி விவகாரத்தில் எடப்பாடி ரொம்பவே குழம்பிபோய் இருக்கிறார். நாளொறு மேனி பொழுதொரு வண்ணமாக மாறிக் கொண்டே இருக்கிறார். தற்போது இணைப்பு குறித்து எடப்பாடிமீது சீனியர்களின் அழுத்தம் அதிகமாகிக் கொண்டே போகிறது. அதேபோல, அவரின் நிழலாக இருக்கும் சேலம் இளங்கோவனை வருமான வரித்துறை சுற்றிவளைத்து வைத்திருக்கிறது. இவற்றை சமாளிக்க பா.ஜ.க-வின் உதவியை நாடுகிறாரோ என்ற சந்தேகம் கட்சிக்குள் எழுந்திருக்கிறது.
அதற்கு வலுசேர்க்கும் விதமாக, 2024 நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் 'பா.ஜ.க-வுடன் எப்போதும் கூட்டணி இல்லை' என்று மேடைக்கு மேடை முழுங்கியவர், தேர்தலுக்கு பிறகு அப்படி பேசுவதையே தவிர்த்துவிட்டார். மா.செ.க்கள் கூட்டத்திலும் தி.மு.க-வை தவிர... என்று சொல்லி பா.ஜ.க-வையும் விமர்சனம் செய்யவேண்டாம் என்று மறைமுகமாக சொல்லிவிட்டார். ' ஒத்த கருத்துடைய கட்சியுடன் அ.தி.மு.க கூட்டணி அமைக்க தயார். பா.ஜ.க உடன் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்ய முடியும்' என்று பேசி மீண்டும் மாட்டிக் கொண்டார் எடப்பாடி.
அ.தி.மு.க இணைப்புடன் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்பதுதான் வேலுமணி உள்ளிட்டோரின் எண்ணமாக இருக்கிறது. இதில் இணைப்புக்கு விருப்பும் இல்லாத எடப்பாடி, பா.ஜ.க உதவியோடு, தனக்கு இருக்கும் பிரச்னைகளை சமாளிக்க திட்டமிடுகிறார். அதன்படிதான், பா.ஜ.க-வுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்று சொல்லி வந்த எடப்பாடி, 'தேர்தல் வரும்போது முடிவு செய்யப்படும்' என்றிருக்கிறார்.
இதனால் கட்சிக்குள் ஏற்பட்ட குளறுபடியை சமாளிக்கவே, ஜெயக்குமாரை வைத்து பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என்று பேச வைத்திருக்கிறார் எடப்பாடி. உண்மையில் பாஜகவுடன் கூட்டணி சேர எடப்பாடிக்கு விருப்பம் இருப்பதால்தான், 'கூட்டணி இல்லையென்று அவர் விளக்கமளிக்காமல், ஜெயக்குமாரை வைத்து பேசவைக்கிறார்." என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb