பிக் பாஸ் - 9 நிகழ்ச்சிக்கு செல்லும் பொன்னி தொடர் நாயகன்!
பிக் பாஸ் - 9 நிகழ்ச்சிக்கு பொன்னி தொடர் நாயகன் சபரி செல்லவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் விரைவில் தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 9வது சீசன் வரும் அக். 5 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து, நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சினிமா மற்றும் பிறதுறைகளைச் சேர்ந்த, மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள், போட்டியாளர்களாக பங்கேற்பார்கள்.
அந்த வகையில் சின்ன திரை நடிகை நக்ஷத்ரா, நடனக் கலைஞரும் சமையல் நிகழ்ச்சியின் பங்கேற்பாளருமான ஜன்மோனி டோலி, பாக்கியலட்சுமி தொடர் பிரபலம் நேஹா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சின்ன திரை நடிகர் புவியரசு உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஹார்ட் பீட் இணையத் தொடரில் நடிக்கும் பாடினி குமார், ரோஷன் ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பொன்னி தொடர் நாயகன் சபரியும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது. இவர் பாரதி கண்ணம்மா, வேலைக்காரன் உள்ளிட்ட தொடர்களிலும் நடித்து பிரபலமானவர்.
தொகுப்பாளரான இவர், யூடியூபில் பல இணையத் தொடர்களில் நடித்துள்ளார். இவர் பிக் பாஸ் வீட்டுக்கு செல்லவுள்ளதாக வெளியான தகவல், அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருந்தாலும், தொடக்க நாள் நிகழ்ச்சியில், பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தெரியவரும்.
கடந்த சீசனை விஜய்சேதுபதி தொகுத்து வழங்கிய நிலையில், புதிய 9வது சீசனையும் விஜய்சேதுபதியே தொகுத்து வழங்கவுள்ளார்.
இதையும் படிக்க: இராமாயணம் நிறைவு: இன்று முதல் புதிய இதிகாச தொடர்!