நுகர்வோர் விலைக் குறியீடு (CPI Data) சொல்லும் தகவல்கள் என்ன? | IPS Finance - 335
`` பிடித்த இசையமைப்பாளர்கள்... இன்ஸ்டா ரீல்ஸ்...'' -ஏ.ஆர்.ரஹ்மான் ஷேரிங்ஸ்
சமீபத்தில் NDTV செய்தி நிறுவனத்திற்கு நேர்காணல் கொடுத்திருக்கும் ரஹ்மான், தனது இசைப்பயணம் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இந்த நேர்காணலை ஸ்ருதி ஹாசன்தான் எடுத்திருக்கிறார்.
இந்த நேர்காணலில் ரஹ்மான் இந்தியைக் கற்றுக்கொண்டது குறித்து பேசியிருந்தார். அதைத்தொடர்ந்து தனக்குப் பிடித்த மேற்கத்திய இசையமைப்பாளர்கள் குறித்தும், தான் நிறைய ரீல்ஸ் பார்க்கும் பழக்கமுடையவர் என்றும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பிடித்த இசையமைப்பாளர்கள்;
John Williams,
Evangelist,
Pat Metheny,
Chick Corea,
gusan,
ABBA,
John Carpenter
இசையமைப்பாளர் கீரவாணிகூட 'John Carpenter' பற்றியெல்லாம் பேசியிருக்கிறார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு 'The Beatles' சகோதரர்களின் இசையை கேட்டேன். அவர்களின் இசை ரொம்ப பிடிச்சிருந்தது. இந்த மேற்கத்திய இசையமைப்பாளர்களின் இசையெல்லாம் ரொம்பப் பிடிக்கும்.
தினமும் 3, 4 மணி நேரங்கள் முழு கவனத்துடன் எந்த தொந்தரவும் இல்லாமல் வேலை பார்க்க விரும்புவேன். அப்போது என் அறைக்குள்கூட யாரையும் அனுமதிக்க மாட்டேன். என்னைத் தேடுவான் என்பதால் என் மகனுக்கு மட்டுமே அனுமதி. அவனும் எந்த தொந்தரவும் செய்யமாட்டான்.
அந்த தனிமையான நேரத்தில் புதிய இசையை அமைத்துப் பார்ப்பேன், புதிய விஷயங்களை முயற்சி செய்வேன், எனக்கு என்ன தெரியும், தெரியாது என்று ஆராய்வேன். நான் என்ன பண்ண நினைக்கிறோனோ அதை எந்தத் தடையும் இல்லாமல் அந்தத் தனிமையான நேரத்தில் செய்வேன்.

இன்று நிறைய சுயாதீன இசையமைப்பாளர்கள் இந்தியாவில் திறமையாக வளர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்த வாய்ப்புகளை அளித்து, உதவி செய்து வருகிறேன்.
நான் நிறைய ரீல்ஸ் பார்ப்பேன். அதிலேயே திறமையான இசையமைப்பாளர்கள், பாடகர்களை அடையாளம் காண்கிறேன்" என்று சொல்லியிருக்கிறார்.