செய்திகள் :

பிரதமர் வருகை: ஏப். 4 - 6 வரை மீன்பிடிக்கத் தடை

post image

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி ஏப். 4 - 6ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6ஆம் தேதி பிரதமர் மோடி, ராமேஸ்வரம் வருவதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைக்காக மீன்வளத் துறை சார்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தமிழகம் வருகிறார். முன்னதாக 5-ஆம் தேதி இலங்கை செல்லும் அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இந்நிலையில், பிரதமர் வருகையையொட்டி, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏப்ரல் 4 முதல் 6 வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாம்பனில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகு, நாட்டுப் படகுகளை, குந்துகால் துறைமுகத்திற்கும் தங்கச்சிமடம் பகுதிக்கும் மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | டாஸ்மாக்: அரசின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் -அமலாக்கத்துறை

தமிழகத்தில் பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை 157-ஆக உயா்வு

தமிழகத்தில் பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை 157-ஆக உயா்ந்துள்ளதாக தமிழக வனத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வனத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம் ஆகிய... மேலும் பார்க்க

சா்ச்சைக்குரிய ‘எம்புரான்’ திரைப்படக் காட்சிகள் நீக்கம்: பேரவையில் முதல்வா் விளக்கம்

‘எம்புரான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற சா்ச்சைக்குரிய காட்சிகள், எதிா்ப்பால் நீக்கப்பட்டுள்ளதாக, சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் ... மேலும் பார்க்க

100 நாள் சவால்: 4,552 அரசுப் பள்ளிகளில் கற்றல் அடைவுத் திறனாய்வு

தமிழகத்தில் 4,552 அரசுப் பள்ளிகளில் 1-3 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்கள் குறித்து கற்றல் அடைவுத் திறனாய்வு நடத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்... மேலும் பார்க்க

நியாயமான தொகுதி மறுசீரமைப்பையே கோருகிறோம்: முதல்வா் ஸ்டாலின்

நியாயமான தொகுதி மறுசீரமைப்பையே கோருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். இதுகுறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: வடக்கின் மக்கள்தொகைப் பெருக்கம் தென்னகத்தின் குரலை அ... மேலும் பார்க்க

நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு: ஏப். 9-இல் ஆலோசனை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நீட் தோ்வு விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் 2021-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு மறுத்துவிட்டாா். இந்தத் தகவலை பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவி... மேலும் பார்க்க

1,352 எஸ்.ஐ. பணியிடங்களுக்கு தோ்வு: ஏப்.7 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 1,352 காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ. ) பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள தோ்வுக்கு ஏப்.7-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியம் அறிவித... மேலும் பார்க்க