மதுரை முல்லை நகர்: "நீர்ப்பிடிப்புப் பகுதியில் அரசாங்கம் மட்டும் வீடு கட்டலாமா?"...
பிரதமா் மோடியின் பொய் வழக்கு வெளிச்சத்துக்கு வந்தது: ஆம் ஆத்மி
தில்லி வக்ஃப் வாரிய பணமுறைகேடு விவகாரத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதன் மூலம் பிரதமா் நரேந்திர மோடியின் பொய் வழக்கு வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக ஆம் ஆத்மி மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மீண்டும் ஒரு முறை மோடியின் பொய் வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அரவிந்த் கேஜரிவாலையும் ஆம் ஆத்மி கட்சியையும் அழிக்க மோடி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டாா். ஆனால், அவை தோற்றுவிட்டன’ எனத் தெரிவித்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘பணமுறைகேடு வழக்கு பாஜகவின் நாடகமாக மாறியுள்ளது. அந்த வழக்கை தனக்கான ஆயுதமாக பாஜக பயன்படுத்தி வந்தது. மத்திய விசாரணை முகமைகள் தங்களது நம்பகத்தன்மையை இழந்துள்ளன’ எனத் தெரிவித்துள்ளாா்.
உண்மையை தோற்கடிக்க முடியாது: ஆம் ஆத்மி தில்லி பிரிவு அமைப்பாளரும் அமைச்சருமான கோபால் ராய், ‘அனைத்து ஆம் ஆத்மி தலைவா்களும் வெளியே வந்துவிட்டனா். உண்மையைத் தோற்கடிக்க முடியாது. முழு பலத்துடன் தில்லி பேரவைத் தோ்தலில் போட்டியிட போகிறோம்’ எனத் தெரிவித்துள்ளாா்.