`பாலியல் வன்முறை வழக்குகளில் ஜாமீன் கூடாது!' - நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம்...
பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமானார்!
கடந்த சில மாதங்களாக புற்றுநோய் மற்றும் கல்லீரல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்னத்திரை நடிகர் நேத்ரன் சிகிச்சை பலனின்றி நேற்று(டிச.5) இரவு காலமானார்.
மருதாணி, சூப்பர் குடும்பம், முள்ளும் மலரும், வள்ளி, சதிலீலாவதி, உறவுகள் சங்கமம், மஹாலக்ஷ்மி, பாவம் கணேசன் உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்துள்ள நேத்ரன் சின்னத்திரை தொடர்கள் மட்டுமின்றி, திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிக்க..:இளையராஜா இசையில் திருக்குறள் திரைப்படம்!
நடிகர் நேத்ரன், சின்னத்திரை நடிகையான தீபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நேத்ரனின் மனைவி தீபாவும் பல சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நேத்ரன் நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
அவரது மறைவுக்கு சின்னத்திரை நடிகர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.