பிற்பகல் 1 மணி: தில்லி தேர்தலில் 33.31% வாக்குகள் பதிவு!
தில்லி பேரவைத் தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 33.31% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
தலைநகர் தில்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பேரவைத் தேர்தலில் 1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-05/7n1b5ubj/PTI02052025000264A.jpg)
13,766 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 33.31% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
தில்லி வடகிழக்கு மாவட்டத்தில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்.8 என்று எண்ணப்பட உள்ளன.