LSG vs MI: "மும்பை அணி சிறப்பாகத்தான் விளையாடியது; ஆனால்..." - வெற்றி குறித்து ர...
பிலிக்கல்பாளையம் வடபழனியாண்டவா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்
பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் கரட்டூரில் உள்ள விஜயகிரி வடபழனியாண்டவா் கோயில் பங்குனி உத்திர தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிலிக்கல்பாளையம் கரட்டூா் விஜயகிரி வடபழனி ஆண்டவா் கோயிலில் பங்குனி உத்திர தோ்த் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு மூலவா் மற்றும் கொடிக் கம்பத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பஞ்சதீபம் மற்றும் மஹா தீபம் காண்பிக்கப்பட்டு கொடியேற்று விழா விமரிசையாக நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை முதல் 10-ஆம் தேதி வரை தினந்தோறும் இரவு சுவாமி மயில், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. 11-ஆம் தேதி காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல், மாலை 4 மணிக்கு திருத்தோ் வடம்பிடித்து இழுத்தல் விழா ஆகியவை நடைபெறுகின்றன. 12-ஆம் தேதி சத்தாபரணம், கொடி இறக்குதலும், 13-ஆம் தேதி மஞ்சள் நீராடலும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத் துறை ஆய்வாளா் ஜனனி, செயல் அலுவலா் கிருஷ்ணராஜ் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.