செய்திகள் :

பிலிப்பின்ஸ்: ஒரே மாதத்தில் 6 புயல்கள் கரையைக் கடந்ததால் பெரும் பாதிப்பு!

post image

மணிலா: தெற்காசிய தீவான பிலிப்பின்ஸ் கடந்த ஒரு மாத காலத்தில் 6 புயல்களால் மிகப்பெரியளவில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.

அங்கு கடந்த 3 வார காலத்தில் 5 புயல்கள் கரையைக் கடந்துள்ளன. கடந்த மாத பிற்பகுதியில், பிலிப்பின்ஸில் ‘ட்ராமி’ புயல் தாக்கியதில், ஒரு மாத காலத்தில் பெய்ய வேண்டிய அளவுக்கு மழைப்பொழிவு, வெறும் 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு நகரங்களிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனால் வீசிய சூறைக்காற்று, மற்றும் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 160-ஐ கடந்துள்ளது.

இந்த நிலையில் கடைசியாக, பிலிப்பின்ஸின் கிழக்கே அமைந்துள்ள கேட்டெண்டுவானெஸ் தீவில் 'மேன்-இ (பெப்பிடோ)’ புயல் சனிக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்துள்ளது. அப்போது, மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று தொடர்ந்து வீசியதாகவும், காற்றின் உச்சபட்ச வேகம் மணிக்கு 240 கி.மீ. வரை சென்றதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைப்பொழிவு அதிகளவில் இல்லாமல் போனாலும், காற்றின் வேகம் அசுரத்தனமாக இருந்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் பாதிப்புகளால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு விவரஙக்ள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.

இதன் காரணமாக, கடலில் அலைகள் சுமார் 7 மீட்டர் (23 அடி) உயரத்துக்கு ராட்சஷ அலைகளாக எழும்பியதால் கடற்கரைப் பகுதிகள் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டன. ஏராளமான மரங்கள் முறிந்ததுடன், மின் கம்பங்களும் சரிந்து விழுந்துள்ளதால் மாகாணம் முழுவதும் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. பல வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.

அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் பாதிக்குப் பாதி பேர், சுமார் 80,000 மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் கரையைக் கடந்துவிட்ட போதிலும், ஞாயிற்றுக்கிழமை வட மேற்கு திசையில் நகர்ந்து, லூஸான் பகுதியை தாக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேன்-இ புயல் மற்றும் அதற்கு முந்தைய இரு புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்களை தற்காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையாக சுமார் 4 லட்சம் மக்கள் பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிலிப்பின்ஸில் கடந்த 3 வார காலத்தில், 26 உள்நாட்டு விமான நிலையங்களும், 2 சர்வதேச விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டதால் பயணிகள் கடும் அவதிகுள்ளாகியுள்ளனர். கடல் வழி பயணங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு தீவுகளுக்கும் பொருள்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைனில் மிகப்பெரியளவில் வான்வழித் தாக்குதல்: மின் சேவை கடும் பாதிப்பு!

உக்ரைன் மீது ரஷிய படைகள் மிகப்பெரியளவில் வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளன. உக்ரைனில் நிகழ்த்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல்கள் குறித்து அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிகா கூறியுள்ள... மேலும் பார்க்க

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் தாக்குதல்: மக்கள் வெளியேற அறிவுறுத்தல்!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நிகழ்த்தி வருவதால் அங்குள்ள மக்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.பெய்ரூட் புறநகர்ப் பகுதிகள் பலவற்றில் இன்று(நவ. 17) தாக்குதல்கள் ... மேலும் பார்க்க

இஸ்ரேல் பிரதமர் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடக்கு இஸ்ரேலில் உள்ள செசரியா நகரில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி, சனிக்... மேலும் பார்க்க

வெள்ளை மாளிகையில் செய்தித் தொடர்பாளராகும் கரோலின் லேவிட்!

புதிய அரசின் வெள்ளை மாளிகை தலைமை செய்தித் தொடா்பாளாராக கரோலின் லேவிட்டை (27) டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாவது: எனது வரலாற்றுச் சிறப்பு மிக... மேலும் பார்க்க

சீனாவில் மீண்டும் கத்திக் குத்து: 8 போ் உயிரிழப்பு; 43 போ் காயம்

சீனாவின் வூக்ஸி நகரில் 21 வயது இளைஞா் நடத்திய கத்திக் குத்து தாக்குதலில் எட்டு போ் உயிரிழந்தனா்; 43 போ் காயமடைந்தனா்.பொதுமக்கள் ஆயுதம் வைத்திருப்பதற்கு தாராள அனுமதியில்லாத அந்த நாட்டில் இது போன்ற தா... மேலும் பார்க்க

அமெரிக்கா: விமானத்தைத் துளைத்த துப்பாக்கித் தோட்டா

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம், டல்லாஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்த பயணிகள் விமானத்தை துப்பாக்கித் தோட்டா ஒன்று துளைத்தது.அதையடுத்து, சௌத்வெஸ்ட் ஏா்லைன்ஸுக்கு சொந்தமான அந்த விமானம... மேலும் பார்க்க