உரிய அளவில் பொருள்களை வழங்காமை: ரூ. 21 ஆயிரம் வழங்க அமேசான் நிறுவனத்துக்கு குறைத...
பீகாரில் ரூ.28,000 கோடி முதலீடு செய்யும் அதானி குழுமம்!
பாட்னா: பில்லியனர் கௌதம் அதானி குழுமம், பீகாரில் அல்ட்ரா-சூப்பர் கிரிட்டிகல் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கும், சிமென்ட் உற்பத்தி திறன், உணவு பதப்படுத்துதல் மற்றும் தளவாட வணிகத்தை விரிவுபடுத்துவதற்கும் சுமார் ரூ.28,000 கோடி முதலீடு செய்யவுள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் இயக்குநர் பிரணவ் அதானி, இது குறித்து பீகார் பிசினஸ் கனெக்ட் 2024 நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பீகார் எரிசக்தித் துறையில் முதலீட்டு செய்ய வாய்ப்புகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். ரூ.20,000 கோடி முதலீட்டில் அல்ட்ரா சூப்பர் கிரிட்டிகல் அனல் மின் நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
இதையும் படிக்க: 7 லட்சம் வாகனங்களைத் திரும்பப் பெறும் டெஸ்லா!
இத்தகைய திட்டத்தால் குறைந்தபட்சமாக 12,000 நபர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பும், சுமார் 1,500 நபர்களுக்கு திறமையின் அடிப்படையில் வேலை கிடைக்கும்.
மின் நிலையத்தின் திறன் குறித்து அவர் தெளிவுபடுத்தவில்லை என்றாலும், அல்ட்ரா சூப்பர் கிரிட்டிகல் ஆலைகள் 1,980 மெகாவாட் அளவு இருக்கலாம் என்ற நிலையில், இதில் மின்சாரம் தயாரிக்க நிலக்கரியைப் பயன்படுத்தப்படும். ஆலை அமைவதற்கான இதற்கான இடம் மற்றும் காலக்கெடு ஆகிய விவரங்களையும் குழுமம் வெளியிடவில்லை.
நாங்கள் இந்த துறைகளில் ரூ.2,300 கோடி முதலீடு செய்ய உள்ளோம். இந்த முதலீட்டால் கிடங்கு கையாளும் திறனை பெருமளவில் அதிகரிப்பது மட்டுமல்லாமல், மின்சார வாகனம், நகர எரிவாயு விநியோகம் மற்றும் உயிரிவாயு இடத்தில் எங்கள் இருப்பை விரிவுபடுத்துவதற்கும் மட்டுமல்லாமல், கூடுதலாக 27,000 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்.
இதையும் படிக்க: ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.85.03ஆக முடிவு!
கதி சக்தி ரயில்வே டெர்மினல்கள், ஐ.சி.டி.க்கள் மற்றும் தொழில்துறை கிடங்கு பூங்காக்கள் உள்ளிட்டவையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மேலும் ரூ.1,000 கோடியை முதலீடு செய்ய போவதாகவும் அவர் தெரிவித்தாா். அதே வேளையில், மாநிலத்தில் உள்ள சிமென்ட் ஆலைகள் பல கட்டங்களாக ரூ.2,500 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 10 மில்லியன் டன் திறனுக்கு விரிவுபடுத்தப்படும் என்றார்.