உக்ரைன் அதிபரின் சொந்த ஊர் மீது ரஷியா தாக்குதல்! 18 பேர் பலி!
புகளூா் தமிழ்நாடு காகித ஆலை சாா்பில் அரசுப் பள்ளிக்கு கழிவறைக் கட்டடம்
பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு புகளூா் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சாா்பில், ரூ. 4.11 லட்சம் செலவில் கழிவறைக் கட்டடம் கட்டப்பட்டு வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலப்பணித் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொத்தனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்காக ரூ. 4.11 லட்சம் செலவில் கழிவறைக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு மாணவியரின் பயன்பாட்டுக்காக ஒப்படைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், புகளூா் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின் பொது மேலாளா் (மனிதவளம்) கலைச்செல்வன், பொது மேலாளா் (மின்னியல் மற்றும் கருவியியல்) ராஜலிங்கம் ஆகியோா் பள்ளிக் கழிவறை கட்டடத்தை திறந்துவைத்தனா். நிகழ்ச்சியில், பொத்தனூா் பேரூராட்சித் தலைவா் கருணாநிதி, பள்ளித் தலைமை ஆசிரியா் குமாா், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.