விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!
புதிய தொடரில் நடிக்கும் பாரதி கண்ணம்மா வினுஷா!
நடிகை வினுஷா தேவி புதிய தொடரில் நடிக்கவுள்ளார். பாரதி கண்ணம்மா தொடரைப் போன்றே இந்தத் தொடரிலும் பெண் குழந்தைக்குத் தாயாகவே நடிக்கவுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை வினுஷா தேவி. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் வினுஷா நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பனி விழும் மலர் வனம் என்ற தொடரில் நடித்திருந்தார். இந்தத் தொடர் அக்கா - தம்பி பாசத்தை மையப்படுத்தி ஒளிபரப்பானது. இதில், நடிகர் ரயானுக்கு அக்காவாக வினுஷா நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது தெலுங்கு மொழியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற சின்னி என்ற தொடரின் மறு உருவாக்கத்தில் நடிகை வினுஷா நடிக்கவுள்ளார்.

இத்தொடரில் பெண் குழந்தையை வளர்க்க பாடுபடும் கணவரை இழந்த மனைவியாக நடிக்கவுள்ளார். பேபி தன்ஷிகா குழந்தை நட்சத்திரமாக நடிக்கவுள்ளார்.
பாரதி கண்ணம்மா தொடரிலும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கு அம்மாவாக நடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கும் பாத்திரமே வினுஷாவுக்கு கிடைத்துள்ளதாக ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க |நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!