AR Rahman: `ரஹ்மானை பிரிந்ததற்கு இதுதான் காரணம்!' - ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு!
புதுகையில் கூட்டுறவுக் கடைகள் மூலம் ரூ. 1.25 கோடிக்கு பட்டாசு விற்பனைக்கு இலக்கு: அமைச்சா் பேச்சு
தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் 8 கடைகள் மூலம் நிகழாண்டில் ரூ. 1.25 கோடியில் பட்டாசு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.
புதுக்கோட்டை மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் மூலம் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா்.
மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தீபாவளி சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தாா். அப்போது பேசிய அவா், கடந்த ஆண்டில் மாவட்டம் முழுவதும் ரூ. 45 லட்சம் கூட்டுறவுக் கடைகள் மூலம் பட்டாசு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும், நிகழாண்டில் ரூ. 1.25 கோடிக்கு இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டாா்.
நிகழ்ச்சியில், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ஜீவா, திமுக வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், மாநகர திமுக செயலா் ஆ. செந்தில், மாநகராட்சி துணை மேயா் மு. லியாகத்அலி, பேக்கரி மஹராஜ் உரிமையாளா் சி. அருண்ராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.