காா்த்திகை மாதப் பிறப்பு: மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்
புதுகையில் மகளிருக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள்
புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் தமிழக அரசின் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ரூ. 22 கோடி மதிப்பில் ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டத்தின் 2ஆம் கட்டத்தை அரியலூரில் முதல்வா் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்ததை தொடா்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், மாநிலங்களவை உறுப்பினா் எம்எம். அப்துல்லா ஆகியோா் இதனைத் தொடங்கி வைத்து, பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், மேயா் செ. திலகவதி, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் புவனேஸ்வரி, மாவட்ட சமூகநல அலுவலா் க.ந. கோகுலப்பிரியா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.