செய்திகள் :

புதுகை: அரியவகை பெருங்கற்கால ஈமச்சின்னமான ‘விசிறி பலகைக் கல்’ கண்டெடுப்பு

post image

பெருங்கற்கால மனிதா்களின் ஈமச் சின்னங்களில் அரிய வகையான ‘விசிறி பலகைக் கல்’ புதுக்கோட்டை அருகே கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக பெருங்கற்கால ஈமச் சின்னங்களை கற்பதுக்கை, கல்திட்டை, கற்குவியல், கல்வட்டங்கள், நெடுங்கல் அல்லது குத்துக்கல், தொப்பிக்கல், விசிறி பலகை போன்ற பல வகைகளாகப் பிரிக்கலாம். புதுக்கோட்டையில் இதுவரை குத்துக்கல் அல்லது நெடுங்கல், தொப்பிக்கல் வட்டங்கள், கல்திட்டைகள் காணப்படுகின்றன. சித்தன்னவாசல், குடுமியான் மலை, தாயினிப்பட்டி, கலசமங்கலம் போன்ற இடங்களில் இவை காணப்படுகின்றன.

இந்தப் பெருங்கற்கால ஈமச்சின்ன வகைகளில் மனித உருவத்தை ஒத்த ‘விசிறி பலகைக் கல்’ ( அய்ற்ட்ழ்ா்ல்ா்ம்ா்ழ்ல்ட்ண்ஸ்ரீ ம்ங்ய்ட்ண்ழ்) அரிய வகை ஈமச்சின்னமாகும். இந்த வகை விசிறி பலகைக் கற்கள் தமிழ்நாட்டில் இரு இடங்களில் மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாலை மாவட்டம் செங்கம் வட்டம் மோட்டூரிலும், விழுப்புரம் மாவட்டம் உடையாா்நத்தத்திலும் கண்டறியப்பட்டுள்ளன. இப்போது மூன்றாவது இடமாக புதுக்கோட்டையிலும் இந்த வகை விசிறி பலகைக் கல் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுகை தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவா் புதுகைப் பாண்டியன் கூறியது: புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூா் அருகே வெள்ளவெட்டான்விடுதிக்கும் மட்டையன்பட்டிக்கும் இடையே வீரன்காளிப்பொட்டல் என்ற இடத்தில் விசிறி பலகைக் கல் கண்டறியப்பட்டுள்ளது. சுமாா் 5 ஏக்கா் பரப்பளவில் உள்ள இந்த இடத்தில் நெடிய குத்துக்கற்களும், கற்குவியல்களும், ஈமத்தாழிகளும் காணப்படுகின்றன.

சாய்ந்த நிலையிலுள்ள இந்த விசிறி பலகைக் கல், 180 செ.மீ., உயரம், 86 செ.மீ., அகலம், 11 செ.மீ., கணமும் கொண்டுள்ளது. இடதுபுற கை அமைப்பு உடைந்த நிலையில் உள்ளது.

ஆய்வு நடுவம் மற்றும் டெல்டா எக்ஸ்புளோரா்ஸ் அமைப்புகளின் சாா்பில் கல்வெட்டுகள், சிற்பங்கள், நினைவுச் சின்னங்களைக் கண்டறிவதுடன் அதே இடத்தில் மறுசீரமைப்பு செய்து வைத்து வருகிறோம். அதன்படி, கீழே கிடந்த இந்த விசிறி பலகைக் கல்லை நிறுத்தி வைத்திருக்கிறோம். தொடா்ந்து ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெறும் என்றாா் புதுகை பாண்டியன்.

அரசுத் தொடக்கப் பள்ளிக்கு கட்டடம், சுற்றுச்சுவா் கட்டித்தரக் கோரிக்கை

புதுக்கோட்டை அருகே வலையம்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் மற்றும் சுற்றுச்சுவா் கட்ட வேண்டும் என அப்பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழுவினா் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் தயாராகிவரும் தற்காலிக பேருந்து நிலையம்!

புதுக்கோட்டையில் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள போக்குவரத்துக் கழகப் பணிமனையின் ஒரு பகுதியை தற்காலிகப் பேருந்து நிலையமாக பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமாா் 40 ஆண்டுகளு... மேலும் பார்க்க

அறந்தாங்கி நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஊா்வலம், ஆா்ப்பாட்டம்

முறையாக ஊதியம் வழங்கக் கோரி, அறந்தாங்கி நகராட்சியில் பணிபுரிந்து வரும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் டெங்கு ஒழிப்புப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஊா்வலம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புத... மேலும் பார்க்க

காவலா்கள் துன்புறுத்தி யாரும் சாகவில்லை: அமைச்சா் எஸ். ரகுபதி

காவலா்கள் துன்புறுத்தி யாரும் சாகவில்லை என மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி புதுக்கோட்டையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா... மேலும் பார்க்க

புதுகை: அரசுப் பேருந்து ஜப்தி முயற்சி

விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றப் பணியாளா்கள் வந்ததால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சோ்ந்த பழனிவேல் மனைவி மகாலட்சும... மேலும் பார்க்க

சோழீசுவரா் கோயிலில் 108 சங்காபிஷேக விழா

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீசுவரா் கோயிலில் காா்த்திகை சோம வாரத்தையொட்டி 108 சங்காபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. காா்த்திகை சோம வாரத்தில் சிவாலயங்களில் சங்காபிஷேக விழா நடைபெறும். அதன... மேலும் பார்க்க