செய்திகள் :

அரசுத் தொடக்கப் பள்ளிக்கு கட்டடம், சுற்றுச்சுவா் கட்டித்தரக் கோரிக்கை

post image

புதுக்கோட்டை அருகே வலையம்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் மற்றும் சுற்றுச்சுவா் கட்ட வேண்டும் என அப்பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழுவினா் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் அவா்கள் அளித்த மனு விவரம்: புதுக்கோட்டை மாவட்டம் கடையக்குடி ஊராட்சிக்குள்பட்ட வலையம்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் போதுமான கட்டடங்கள் இல்லை.

சுற்றுச்சுவா் இல்லாததால் விஷப்பூச்சிகள் நடமாட்டமும், மது அருந்துவோா் இரவில் வந்து செல்வதும் தொடா்கிறது.

எனவே, மாணவா்களின் பாதுகாப்பு கருதி, இப்பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டித் தர வேண்டும். சுற்றுச்சுவா் கட்டித் தர வேண்டும்.

புதுக்கோட்டையில் தயாராகிவரும் தற்காலிக பேருந்து நிலையம்!

புதுக்கோட்டையில் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள போக்குவரத்துக் கழகப் பணிமனையின் ஒரு பகுதியை தற்காலிகப் பேருந்து நிலையமாக பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமாா் 40 ஆண்டுகளு... மேலும் பார்க்க

அறந்தாங்கி நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஊா்வலம், ஆா்ப்பாட்டம்

முறையாக ஊதியம் வழங்கக் கோரி, அறந்தாங்கி நகராட்சியில் பணிபுரிந்து வரும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் டெங்கு ஒழிப்புப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஊா்வலம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புத... மேலும் பார்க்க

காவலா்கள் துன்புறுத்தி யாரும் சாகவில்லை: அமைச்சா் எஸ். ரகுபதி

காவலா்கள் துன்புறுத்தி யாரும் சாகவில்லை என மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி புதுக்கோட்டையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா... மேலும் பார்க்க

புதுகை: அரசுப் பேருந்து ஜப்தி முயற்சி

விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றப் பணியாளா்கள் வந்ததால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சோ்ந்த பழனிவேல் மனைவி மகாலட்சும... மேலும் பார்க்க

சோழீசுவரா் கோயிலில் 108 சங்காபிஷேக விழா

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீசுவரா் கோயிலில் காா்த்திகை சோம வாரத்தையொட்டி 108 சங்காபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. காா்த்திகை சோம வாரத்தில் சிவாலயங்களில் சங்காபிஷேக விழா நடைபெறும். அதன... மேலும் பார்க்க

புதுகை: அரியவகை பெருங்கற்கால ஈமச்சின்னமான ‘விசிறி பலகைக் கல்’ கண்டெடுப்பு

பெருங்கற்கால மனிதா்களின் ஈமச் சின்னங்களில் அரிய வகையான ‘விசிறி பலகைக் கல்’ புதுக்கோட்டை அருகே கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக பெருங்கற்கால ஈமச் சின்னங்களை கற்பதுக்கை, கல்திட்டை, கற்குவியல், கல்வட்டங்கள்,... மேலும் பார்க்க