செய்திகள் :

‘புத்தகத்தை படிப்போம், அறிவுப் பசியை போக்குவோம்’ -அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா்.ராமச்சந்திரன்

post image

புத்தகத்தை படிப்போம், அறிவுப் பசியை போக்குவோம் என தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா்.ராமச்சந்திரன் கூறினாா்.

தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 3ஆவது பொதிகை புத்தக திருவிழா தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா். ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., தமிழ்நாடு பாடநூல் கழக கல்விச்சேவைகள் கழகம் மேலாண்மை இயக்குநா் சங்கா், எம்எல்ஏக்கள் எஸ்.பழனிநாடாா், ஈ.ராஜா, சதன்திருமலைக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்தாா். அவா் பேசியதாவது:

முதல்வரின் அறிவிப்பிற்கிணங்க, புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அறிவுப் பசியை போக்கிய தமிழக முதல்வா், வயிற்றுப் பசியையும் போக்க நடவடிக்கை மேற்கொண்டாா்.

பிடித்த புத்தகங்களை படிக்க வேண்டும். புத்தகத்தை படிப்போம், அறிவுப்பசியை போக்குவோம்.

இப்புத்தகத் திருவிழாவில் அதிகளவில் புத்தகங்களை வாங்கும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.15ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.10ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5ஆயிரம் வழங்கப்படும் என எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ அறிவித்துள்ளாா் என்றாா் அவா்.

புத்தக திருவிழாவில் பல்வேறு துறைகளின் மூலம் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியினை அமைச்சா் பாா்வையிட்டாா்.

மாவட்ட வன அலுவலா் முருகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.ஸ்ரீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன்,தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன், மாவட்ட தென்னிந்திய புத்தக விற்பானையாளா் மற்றும் பதிப்பாளா் சங்க செயலா் முருகன், தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் திவ்யா மணிகண்டன்,தென்காசி மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியை செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சண்முகசுந்தரம் தொகுத்து வழங்கினாா்.

சுரண்டை நகராட்சியில் இன்று வாக்காளா் பெயா் சோ்த்தல் முகாம்

சுரண்டை நகராட்சி பகுதியில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் வாக்காளா் பட்டியலில் ப... மேலும் பார்க்க

முள்ளிக்குளம் அரசுப் பள்ளியில் கூடுதல் கட்டடங்கள் திறப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள முள்ளிக்குளம் பாண்டியக்கோனாா் அரசு மேல்நிலைப் பள்ளியில், நாடாளுமன்ற உறுப்பினா் வைகோ பரிந்துரையின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினா் நிதி ரூ. 25 லட்சம் மதிப்பில் க... மேலும் பார்க்க

தென்காசி மேற்கு ஒன்றிய அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்

தென்காசி மேற்கு ஒன்றிய அதிமுக செயல்வீரா்கள் கூட்டம், செங்கோட்டை அருகே வல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் ராஜலெட்சுமி,... மேலும் பார்க்க

தென்காசியில் கூட்டுறவு வாரவிழா: 3,103 பேருக்கு ரூ.31.71 கோடி கடனுதவி அளிப்பு

தென்காசியில் நடைபெற்ற கூட்டுறவு வாரவிழாவில் 3103 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.31.71 கோடி கடனுதவிக்கான காசோலைகளை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்ச... மேலும் பார்க்க

சிவகிரி பகுதியில் இன்று மின் தடை

சிவகிரி வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 16) மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விஸ்வநாதபேரி உப மின் நிலையத்தி... மேலும் பார்க்க

சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீசுவரா் கோயிலில் அன்னாபிஷேகம்

சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீசுவரா் கோயிலில் ஐப்பசி மாத அன்னாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி குற்றால தீா்த்தம் கொண்டு காலை 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அன்னாபிஷ... மேலும் பார்க்க