புத்தர் வடிவ டிரம்ப் சிலைகள் ரூ.2.30 லட்சத்துக்கு விற்பனை!
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பின் உருவத்தை புத்தர் போல உருவாக்கியுள்ளார் சீனாவைச் சேர்ந்த பீங்கான் உருவ வடிவமைப்பாளரும் சிற்பியுமான ஹாங் ஜின்ஷி.
வருகிற ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில், புத்தர் வடிவிலான டிரம்ப் சிலைகள் உலகளாவில் கவனத்தை ஈர்த்துள்ளன.
சீனக் கைவினைக் கலைஞர் ஹாங் ஜின்ஷியின் சிலைகள், 140 டாலர்கள் முதல் 2,700 டாலர்கள் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. கலை மற்றும் அரசியலை இணைக்கும் இந்த பீங்கான் சிலைகள், உலகெங்கிலும் உள்ள சிலை சேகரிப்பாளர்களிடம் அதிக ஆர்வத்தை ஈர்த்துள்ளன.
காட்டுத்தீக்கு இரையாகும் வீடுகளைப் பாதுகாக்க ஒரு மணி நேரத்துக்கு ரூ.1.7 லட்சம்!
999 முதல் 20,000 யுவான்களுக்கு (சுமார் ரூ.11,000 முதல் ரூ.2.30 லட்சம் வரை) அவற்றின் அளவைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்துள்ளார் ஹாங் ஜின்ஷி. முதன்முதலில் 2021 ஆம் ஆண்டில் ஈ-காமர்ஸ் தளமான டோபோவில் இது வைரலாக பரவியது.
இந்த சிலைகள் அமேஸான் மற்றும் சீன இணையதள விற்பனை நிறுவனமான டெமுவில் விற்பனைக்கு உள்ளன.
இதுபற்றி 47 வயதான ஹாங் ஜின்ஷி கூறும்போது, “தேர்தலில் அவர் வெற்றி பெற்ற பின்னாள்களில் நிறைய ஆர்வம் இருந்தது. முதலில் சிலைகளை நகைச்சுவைக்காக வடிவமைத்தேன்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான பீங்கான் சிலைகளைஉருவாக்கியுள்ளேன். டிரம்பின் செயல் முறையும் புத்தர் சிலையின் வடிவமும் இரண்டு எதிரெதிர் வடிவங்கள் என்பதால் வாடிக்கையாளர்கள் புன்னகையுடன் வாங்கிச் செல்கின்றனர்” என்றார்.
ஜுராசிக் காலத்தைச் சேர்ந்த டைனோசர் கால் தடங்கள் கண்டுபிடிப்பு!