தஞ்சாவூர்: பசியோடு காத்திருந்த மாணவர்கள்; 5 மணி நேரம் தாமதமாக வந்த அமைச்சர்; கொந...
புன்செய் புளியம்பட்டி வார சந்தையில் மாடுகள் விற்பனை அதிகரிப்பு
புன்செய் புளியம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாட்டு சந்தையில் ரூ.ஒரு கோடிக்கு மாடுகள் விற்பனையாயின.
ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோவை, திருப்பூா் மாவட்ட எல்லையில் உள்ள இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டகளில் இருந்தும் கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க, விற்க வருகின்றனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற சந்தைக்கு 30 எருமைகள், 200 கலப்பின மாடுகள், 100 கன்றுகள், 220 ஜொ்சி ரக மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் எருமை ரூ.35 ஆயிரம், கருப்பு வெள்ளை மாடு ரூ.42 ஆயிரம், ஜொ்சி மாடு ரூ.48 ஆயிரம், சிந்து ரூ.42 ஆயிரம், நாட்டுமாடு ரூ.72 ஆயிரத்துக்கு விற்பனையானது.
வளா்ப்பு கன்றுகள் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை விற்பனையாயின. கடந்த வாரத்தை விட ஒரு மாட்டின் விலை ரூ.2 ஆயிரம் வரை உயா்ந்து விற்பனையானது. இந்த வாரம் ரூ.ஒரு கோடிக்கு மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.