செய்திகள் :

பும்ராவை குரங்கு இனத்துடன் ஒப்பிட்ட வர்ணனையாளர்! கொந்தத்த ரசிகர்கள்!

post image

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை குரங்கு இனத்துடன் ஒப்பிட்டு வர்ணனையாளர் பாராட்டியதற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பார்டர் - காவஸ்கர் தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. முதல் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் 1-1 என்று சமனில் உள்ளன.

தற்போது பிரிஸ்பேனின் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகின்றன. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மூன்றாம் நாளான இன்று இந்திய வீரர்கள் பேட்டிங் செய்து வருகின்றனர்.

பும்ராவை அவமதித்த வர்ணனையாளர்

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சிறப்பான பங்களிப்பை அணிக்காக வழங்கினார். அதேபோல், மூன்றாவது டெஸ்ட்டிலும் முதல் இன்னிங்ஸில் மட்டும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது, வர்ணனை செய்து கொண்டிருந்த பிரட் லீ, மிகவும் மதிப்புமிக்க வீரர் என்று பாராட்டினார்.

இதற்கு பதிலளித்த மற்றொரு வர்ணனையாளர் ஈசா குஹா, மிகவும் மதிப்புமிக்க பிரைமிட் என்று பும்ராவை குறிப்பிட்டார். (பிரைமிட் என்பது குரங்கு இனத்தைச் சேர்ந்த விலங்கு)

ரசிகர்கள் கண்டனம்

ஈசாவின் வர்ணனை இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், இந்திய ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

உலகின் தலைசிறந்த பவுலராக உள்ள பும்ராவை எப்படி குரங்கு இனத்துடன் ஒப்பிட முடியும்? இது திட்டமிட்டே வெளியிட்ட கருத்து என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஈசா குஹா மன்னிப்பு

இந்திய ரசிகர்களின் கண்டனத்தை தொடர்ந்து, மூன்றாவது நாள் போட்டியின் வர்ணனையில் ஈடுபட்ட ஈசா, பும்ரா மற்றும் இந்திய ரசிகர்களிடம் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

அவர் நேரலையில் பேசியதாவது:

”நேற்று வர்ணனையில் நான் பலவிதங்களில் எடுத்துக்கொள்ளக் கூடிய ஒரு வார்த்தையைப் பயன்படுத்தினேன். அதில் குற்றம் இருப்பின், அதற்காக நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். மற்றவர்களை மரியாதையுடன் நடத்தும் விஷயத்தில் நான் மிகவும் உயர்ந்த தரத்தை அமைத்துக் கொண்டுள்ளேன். முழு வர்ணனையும் நீங்கள் கேட்டால், இந்தியாவின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரைப் பற்றிய மிக உயர்ந்த பாராட்டு மட்டுமே நான் வெளிப்படுத்தி இருப்பேன். மேலும் நான் மிகவும் போற்றும் நபரில் அவரும் ஒருவர்.

நான் அவரது சாதனையின் மகத்துவத்தை வடிவமைக்க முயற்சித்தேன், நான் தவறான வார்த்தையைத் தேர்ந்தெடுத்திவிட்டேன். அதற்காக நான் ஆழ்ந்த வருந்துகிறேன். தெற்காசிய பாரம்பரியத்தைச் சேர்ந்த ஒருவர் என்ற முறையில் தெரிவித்துவிட்டேன், வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதை மக்கள் அங்கீகரிப்பார்கள் என்று நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னதாக கடந்த 2008ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஹர்பஜன் சிங்கை பார்த்தும் குரங்கு என்று ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் வர்ணனை செய்திருந்தார்.

தற்போது மீண்டும் இந்திய வீரரான பும்ராவை அவ்வாறு வர்ணனை செய்துள்ளது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றிப் பாதையில் நியூஸி.! இங்கிலாந்துக்கு 658 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 658 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்றுவருகிறது.இந்தத் ... மேலும் பார்க்க

வங்கதேச கிரிக்கெட் வீரருக்கு பந்துவீசத் தடை விதித்த ஐசிசி!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச வங்கதேச கிரிக்கெட் வீரரான ஷகிப் அல் ஹசனுக்கு ஐசிசி தடை விதித்துள்ளது. வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் சர்வதேச டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வுபெற்... மேலும் பார்க்க

பிரிஸ்பேன் டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம்

பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடரின் 3-ஆவது ஆட்டம், பிரிஸ்பேன் நகரில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறத... மேலும் பார்க்க

தந்தையானார் டெவான் கான்வே!!

நியூசிலாந்து வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரருமான டெவான் கான்வேவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் கொண்டாடப்படும் வீரர்களின் ஒருவரான டெவான் கான்வே, கடந்... மேலும் பார்க்க

கிரிக்கெட் வீரர் கான்வேக்கு பெண் குழந்தை!

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கான்வேக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட்டின் முன்னணி வீரர் டெவன் கான்வே தனது தனது நீண்டகால காதலியான கிம் வாட்சனை கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தென... மேலும் பார்க்க

முதல் டி20: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வங்கதேச அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில... மேலும் பார்க்க