அரசைக் குறை கூறுவதையே வாடிக்கையாகக் கொண்ட எதிா்க்கட்சிகள்: புதுவை முதல்வா் என்.ர...
பூந்தமல்லி சாலையில் பாரம் தாங்காமல் சாய்ந்த மெட்ரோ தூண் கம்பிகள்... வாகன ஓட்டிகள் அச்சம்!
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவம்பர் 27) புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் என்று தெரிவித்திருக்கிறது. மேலும், இது அடுத்த இரு தினங்களில் வடக்கு, வடமேற்காக இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
இதனால், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
இத்தகைய சூழலில், சென்னையில் பூந்தமல்லி சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளில், கட்டப்பட்டு வரும் 30 அடி உயர கான்கிரீட் தூணின் கம்பிகள் பாரம் தாங்காமல் சாய்ந்திருக்கின்றன. வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கம்பிகள் சாய்ந்திருக்கும் போதிலும், பொதுமக்களுக்கும் வாகனங்களுக்கு அவ்வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
தற்போது, இரண்டு ராட்சத கிரேன்கள் கொண்டுவரப்பட்டுச் சாய்ந்த கம்பிகளைச் சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாகவும், கனமழை காரணமாக மெட்ரோ பணிகளில் செய்யப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மெட்ரோ நிர்வாக அதிகாரியிடம் பேசியபோது, ``அதைச் சரிசெய்வதற்கான வேலைகள் நடைபெறுகின்றன. ஸ்பாட் ரிப்போர்ட் ரெடியான பிறகு இது குறித்து விளக்கமாகத் தெரிவிக்கப்படும். ரெட் அலர்ட்டை பொறுத்தவரையில், அந்த சமயத்தில் வார் ரூம் மூலம் கண்காணித்துத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்." என்று அவர் தெரிவித்தார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...