பிக் பாஸ் 8: முதலில் போட்டி, பிறகுதான் நட்பு! செளந்தர்யாவுக்கு சிவக்குமார் ஆறுதல...
பூர்வ ஜென்ம பரிகார பூஜை: தீபத் திருநாளில் திருவண்ணாமலையில் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் நிச்சயம் தீரும்
2024 டிசம்பர் 13-ம் நாள் வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளில் திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஸ்ரீஅம்மணி அம்மன் ஆலயத்தில் பூர்வ ஜென்ம பரிகார பூஜை நடைபெற உள்ளது. இதனால் உங்கள் பாவங்கள், தோஷங்கள், சாபங்கள் யாவும் நீங்கி வளமும் நலமும் பெறுவீர்கள்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07
பூஜையில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
எதை செய்தாலும் தோல்வி; எந்த நல்ல காரியங்களும் நடப்பதில்லை. அதிர்ஷ்டமே இல்லாத நபரா நா. நல்லதைச் செய்தாலும் வம்பாக மாறிவிடுகிறது; உதவி செய்தாலும் உபத்ரவத்தில் முடிகிறது; நம்பிக்கையானவர் என்று எவருமே இல்லை. குடும்பத்திலும் சிக்கல். பணியிடத்திலும் சச்சரவுகள். உறவுகளின் நம்பிக்கை துரோகம். எங்கும் எதிலும் ஏமாற்றம் என்று கவலைப்படுகிறீர்களா! தொடர்ந்த நோய்கள், விடாத கடன் தொல்லைகள், திருமணத்தடை, வழக்கு-சண்டைகள், எதிரிகள் தொல்லை, எதிர்மறை எண்ணங்கள் இப்படி வாழ்க்கை முழுக்க துன்பங்களா! பல இடங்களிலும் எதிர்ப்பும் அவமரியாதையும் கிடைத்து வருகிறதா. இதற்கெல்லாம் சோர்ந்துவிடாதீர்கள்.
நன்மைகளைச் செய்யும் நல்லவர்களுக்கு சோதனைகள் வருவது இயல்புதானே. இந்த கஷ்டங்களுக்கு எல்லாம் காரணம் என்ன என்று பாருங்கள். அதை சரி செய்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுங்கள். அப்படியும் துன்பங்கள் தொடர்கின்றன என்றால் அதற்கு பூர்வ ஜென்ம பாவங்களும் தோஷங்களும் சாபங்களும் கூட காரணமாக முன் ஜென்மத்தில் நீங்கள் செய்த வினையோ அல்லது உங்கள் முன்னோர்கள் செய்த வினைகளோ உங்களை தற்போது பாதித்து ஆட்டிப் படைக்கலாம். அதை எல்லா நிவர்த்தி செய்யவே இந்த பூர்வ ஜென்ம பரிகார பூஜை நடக்கவுள்ளது.
அதுவும் எங்கே தெரியுமா! சகல வினைகளையும் நீங்க்கி வாழ்வில் நலமே அருளும் திருவண்ணாமலை அம்மணி அம்மன் கோயிலில்தான்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள சென்னசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பெண் சித்தர் அம்மணி அம்மாள். இவர் 1735-ம் ஆண்டு அவதரித்து 1785-ம் ஆண்டில் மகா ஜீவசமாதி அடைந்தவர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் 171 அடி உயர வடக்கு கோபுரத்தை பல சித்து விளையாட்டுகளின் வழியே கட்டிமுடித்தவர் இவர்தான். அதனால், அண்ணாமலையார் கோயிலின் வடக்கு கோபுரமானது, 'அம்மணி அம்மன் கோபுரம்' என்று இவரின் பெயரைக்கொண்டே அழைக்கப்படுகிறது. 1785-ம் ஆண்டில் தைப்பூசத்தன்று... ஈசான்ய லிங்க சந்நிதிக்கு எதிரில் இவர் ஜீவசமாதி அடைந்திருக்கிறார். இவர் இறுதியில் கூறியவாறு இன்றும் அவரை நாடே வரும் பக்தர்களைக் காத்து வருகிறார் என்கிறார்கள் பக்தர்கள்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07
பூஜையில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
கார்த்திகை மாதக் கிருத்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது கார்த்திகை மகாதீபம். அடிமுடி காண இயலாமல் எழுந்த ஈசனைக் கொண்டாடும் விழா. இது திருவண்ணாமலையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். சுமார் 25 லட்சம் மக்கள் கூடும் இந்த விழாவில் திருக்கார்த்திகை நாளில் (2024 டிசம்பர் 13-ம் நாள் வெள்ளிக்கிழமை) திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஸ்ரீஅம்மணி அம்மன் ஆலயத்தில் பூர்வ ஜென்ம பரிகார பூஜை நடைபெற உள்ளது. இதனால் உங்கள் பாவங்கள், தோஷங்கள், சாபங்கள் யாவும் நீங்கி வளமும் நலமும் பெறுவீர்கள். மாலை 4 முதல் 5 வரை பூர்வ ஜென்ம பரிகார பூஜையும் பிறகு மலைமீது தீபம் ஏற்றப்படும் வேளையில் அரச இலை தீபமும் ஏற்றப்பட உள்ளது.
அரச இலை தீப வழிபாடு என்பது சித்தர்களால் கடைப் பிடிக்கப்பட்ட ஒரு தாந்த்ரீக வழிபாடு. ராஜ விருக்ஷம் எனப்படும் அரச மரத்தில் மும்மூர்த்திகளின் அம்சமும் உண்டு. அரச மர இலையில் மண் அகல் வைத்து, திரியிட்டு தீபம் ஏற்றினால் ஒருவர் செய்த பூர்வ ஜன்ம பாவமும், ஜாதக தோஷங்களும் விலகும்; நம்மிடம் உள்ள எதிர்மறை எண்ணங்கள் விலகி, தெளிவும் உற்சாகமும் உண்டாகும்; குபேர வாழ்வு கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள்.
அற்புதமான இந்த வழிபாட்டில் வாசகர்களும் பங்கேற்கலாம். சங்கலப் பிரார்த்தனை செய்து வழிபட்டு சகல நன்மைகளையும் அடையலாம்! செல்வ வளம், கடன் பிரச்னை தீர்வு, வேலை-பதவி உயர்வு, வெளிநாட்டு வாய்ப்புகள், வியாபார விருத்தி, தொழில் வளர்ச்சி, குழந்தைகள் நலம், ஆரோக்கிய வாழ்வு, தோஷ நிவர்த்தி முதலான சகல பிரார்த் தனைகளையும் முன்வைத்து நிகழவுள்ளது. நீங்களும் முன்பதிவு செய்து பூஜையில் கலந்து கொண்டு அண்ணாமலையார் உண்ணாமுலையம்மை, அம்மணி அம்மாள் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்று வாழலாம்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07
பூஜையில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, அட்சதை, மற்றும் விபூதி அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan