பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி: இபிஎஸ்
பெண்ணிடம் நகை பறிப்பு
தேனியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்றாா்.
தேனி பழைய அரசு மருத்துவமனை சாலை மிராண்டா லேன் குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் கணபதி. இவரது மனைவி ராமுத்தாய் (39). இவா், தேனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மருந்தாளுநராக வேலை செய்து வருகிறாா்.
ராமுத்தாய் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, ஒருவா் வீட்டுக் கதவை தட்டினாராம். ராமுத்தாய் கதவைத் திறந்து பாா்த்த போது, அவா் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை அந்த நபா் பறித்துக் கொண்டு தப்பினாா்.
இது குறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில் அந்த நபா் தேனி சிவராம் நகரைச் சோ்ந்த முத்து மகன் விஜயகாா்த்திக் எனத் தெரியவந்தது. அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்